Sunday, 29 July 2018

ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :)

கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்னாப்சாட் வைபர் வாட்ஸாப் ,ஸ்கைப் என பன்முனையிலிருந்தும் கேள்விக்கணைகள் :)  நிறைய குறிப்புக்கள் இருக்கு ஒவ்வொன்றாக வெளிவரும் என்று எனது சமையல் குறிப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் கோடானுகோடி ரசிகப்பெருமக்களுக்கு அறிவிக்கிறேன் .

                                                                               எனது ரசிகர்களின் பேராவலை பார்க்கும்போது .ஒரு யூ டியூப் சானலும் துவங்கும் யோசனை இருக்கு .தற்சமயம் பிசியாக இருப்பதால் கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறேன் அந்த யோசனையை :)

முந்தி காகிதப்பூக்களிலும் ரசித்து ருசித்த குறிப்புகள் பகிர்ந்திருக்கிறேன் அது இங்கும் தொடர்கிறது ..


1,பருப்புக்கீரை 
ஆங்கிலப்பெயர் ..PURSLANE 
ஜெர்மன் பெயர் ---Gemüse-Portulak


                                                                                
ரொம்ப காலம் கழித்து பஞ்சாபி கடையில் பார்த்தேன் ,சமீபத்தில் கீதாக்காவின் பிளாக்கில் பருப்புக்கீரை மசியல் குறிப்பும் கிடைத்தது .அதில் அக்கா வித்தியாசமா செஞ்சிருந்தாங்க .அதே முறையில் செய்தபோது ருசி அபாரம் .
எப்பவும் நான்  கீரையை பருப்போடவே வேக வைப்பேன் அது சுவையே இல்லாம இருந்தது ஆனா முதல்முறை அக்கா சொன்ன மாதிரி தனியா வேகவைத்து பருப்புடன் சேர்த்தேன் .
                                                                                     
பருப்புக்கீரை மசியல் http://geetha-sambasivam.blogspot.com/2018/06/blog-post_23.html*********************************************************************************
நெல்லைத்தமிழனின் வல்லாரை துவையல் from எங்கள் பிளாக் :)


                                                                                 
எங்கள் பிளாக்கில் ரெசிப்பி படிக்கும்போதே பின்னூட்டமிட்டேன் உடனே செய்யப்போறதா .அப்படியே செய்தாச்சு :) 
வல்லாரை துவையலுக்கு கீரை  இளம் கீரையாக இருப்பது நல்லது .

*********************************************************************************


      
                                                                             
இதற்குமுன்னும் செஞ்சிருக்கேன் ஆனா இம்முறை சுவை மிகவும் வித்யாசமாக இருந்ததுன்னு வீட்டில் கணவரும் மகளும் பாராட்டினாங்க :) 
இத்தனை நாளும் நான் செஞ்ச தவறு ஆரம்பத்திலேயே எண்ணெய்யில் போட்டு வெங்காயத்தை வதக்கி வைத்ததால் சுவை வேறுமாதிரி வரும் .ஆனா அதிரா குறிப்பில் சொன்ன மாதிரி செஞ்சா மாறுபட்ட சுவையுடன் இருக்கு ..

சீனிசம்பலுடன் என் சொந்த முயற்சியில் உருவான கேரளா ஆப்பம் :)

பொதுவாகவே எனக்கு சமையலில் ஈஸ்ட் /சமையல் சோடா வகைகள் சேர்ப்பது பிடிக்காது ..அதெல்லாம் சேர்க்காமல்  செய்த ஆப்பம் உப்பி வரவில்லை ஆனால் சுவை நன்றாக இருந்தது .


ஆப்பம் செய்ய 
=================
பச்சரிசி --1 1/2 கோப்பை 
மீந்த இட்லிமாவு --1 டேபிள் ஸ்பூன் 
துருவிய தேங்காய் --1 கோப்பை 
தேங்காய் தண்ணீர் 1/2 கோப்பை 
வெள்ளை சமைத்த சாதம்  --- 1/4 கோப்பை .

அரிசியை சுமார் 3 ,மணிநேரம் ஊறவைத்து , சமைத்த சாதம் மற்றும் தேங்காயுடன் சேர்த்து அரைத்து அதில் தேங்காய் தண்ணீர் மற்றும் மீந்த இட்லிமாவு சேர்த்து கலந்து சிறிது உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி ப்ரவுன் சர்க்கரை சேர்த்து கலந்து 8 மணிநேரம் கழித்து சுட்டேன் .நான் non ஸ்டிக் ஆப்பச்சட்டியை பயன்படுத்தினேன் அதனால் தட்டையாவே வந்தது .

*********************************************************************************

அதிராவின் வாழைத்தோல் சம்பல் வித் மை டச் :)


நான் பயன்படுத்தியது நேந்திரம் காய் தோல் .
இந்த குறிப்பு எங்கள் பிளாகில் பார்த்து செய்தது அதே முறையில் 1,வேகவைத்து துருவி வெறும்வெங்காயம் ,காய்ந்த மிளகாய்  தேங்காய் துருவல் மட்டும் சேர்த்து இடித்து செய்தது .
                                                                                 
   
2, இடிக்காமல் வேகவைத்து மெலிதாக நீளவாக்கில் ஜூலியன் கட் செய்து வதக்கியது .                                                                எப்படி செய்தாலும் தோல் தோரன் செம ருசிங்க .

இது நெல்லைத்தமிழனின் ரெஸிப்பி உருளைக்கிழங்கு கரெமது 
எங்கள் பிளாகில் வெளியான ரெசிப்பி இங்கே சுட சுட :)

https://engalblog.blogspot.com/2019/01/blog-post_7.html                                                                                   
 

********************************************************************************

அடுத்து வர இருப்பது ஹேஷ் பிரவுன் , மாங்கா ரசம் ,வாழைப்பூ புளிக்குழம்பு இதில் ஒன்று :)

 *********************************************************************************60 comments:

 1. நாங்களும் கீரை தனியாக, பருப்பு தனியாகத்தான் வேகவைப்போம். படத்தில் கீரையின் பச்சை நிறமே தெரியவில்லையே..!

  ReplyDelete
  Replies
  1. பச்சை நிறம் சமைத்த பின் or முன் ???

   Delete
  2. ஹிஹி :) அதெல்லாம் நானா இப்போதான் கீதாக்கா ரெசிப்பி பார்த்தே தெரிஞ்சிகிட்டேன்

   Delete
 2. வல்லாரைத் துவையல் சீனி சம்பல் வாழைத்தோல் சம்பல் எல்லாமே செஞ்சதை படம் போட்டு நீங்கள் அவற்றை எல்லாம் செய்தீர்கள் என்று நிரூபித்து விட்டீர்கள் என்று சொல்லிக் கொண்டு....!

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர் :) என்ன பண்றது ஸ்ரீராம் ஹாலிடேஸ் வேறவா முக்கியப்பணி வேற வந்துடுச்சி மல்ட்டி டாஸ்கிங் செய்றன் இப்போல்லாம் இனிமே ஆடியோ ரெக்கார்ட் செஞ்சி போடபோறேன் என் கணவர் மகள் ரிவ்யூவுடன் :)

   Delete
 3. கலந்து அடிச்சுட்டீங்க! அது சரி, எல்லாத்தையும் ஒவ்வொண்ணாச் செய்தீங்களா? இல்லை ஒரே நாளைக்குச் செய்துட்டீங்களா? ஆப்பம் பார்த்தால் ஒரு முறை செய்து பார்க்கச் சொல்லுது! பார்ப்போம் இம்முறை! தேங்காய் வேறே நிறைய இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வேற வேற நாள் தான் க்கா செஞ்சேன் உங்க பருப்புக்கீரை ரெசிப்பி செஞ்சி மூணு வரம் ஆச்சு ஆப்பம் முந்தாநாள் .எல்லாத்தையும் படம் எடுத்து வச்சிட்டேன் :)

   தேங்காய் உடைக்கும்போது அந்த தண்ணியும் எடுத்து மாவில் கலக்குங்க .நம்மூர் வெதருக்கு இரவு கலந்த காலை சுடலாம் .
   அதோடா நோ ஈஸ்ட் சோடாஉப்பு .உடலுக்கு எந் தீங்குமில்லை .

   தேங்காய் சேர்த்து மையா அரைபட்டு சுவையை கூட்டுது ஆப்பத்துக்கு செஞ்சி பாருங்க

   Delete
 4. பருப்புக்கீரை மசியல் என்று கீதா அவரகளின் லிங்கை க்ளிக் செய்தால் அது அதிராவின் வலைத்தளத்திற்கு செய்யும் படி செய்து இருக்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. இப்போ சரி செஞ்சிட்டேன் :)

   Delete
 5. ஏதோ மற்ற பதிவர்களின் சமையல் குறிப்பை இந்த வயதான காலத்திலாவது கற்று சமைக்கணும் என்று உங்களுக்கு தோன்றியதற்கே உங்களை பாராட்டனும் ஒரு வேளை வாய்ப்பு கிடைத்து உங்கள் ஏரியா பக்கம் வந்தால் மாமிக்கு சாப்பிட ஏதாவது கிடைக்கும்

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர் :) உங்களுக்கு ஜெலஸ் என் மேலே நான் விதவிதமா சமைக்கிறேன்னு ..யெஸ் :) சைவம் விதவிதமா சமைப்பேன் .எனக்கு என் சமையல் மட்டுமே பிடிக்கும் ஒத்துக்கும் என்கிறதால் சமைச்சி சமைச்சி பழகிட்டேன் தாராளமா மாமியை அழைச்சிட்டு வரலாம்

   Delete
 6. எதிரி நாடு, பக்கத்து நாடு இளவரசிகளை, தங்கள் அரசகுமாரன்களுக்கு மணமுடித்து, அவங்களை நட்பு வட்டாரத்தில் சேர்த்து அவங்க எந்தப் பிரச்சனையும் எழுப்பாம பாத்துக்பிற மாதிரி உங்களைக் கலாய்க்கும் எங்கள் இருவரின் ரெசிப்பிக்களைச் செய்துபார்த்துவிட்டதால் இந்தத் தடவை உங்களை ஆஹா ஓஹோ என்று புகழப்போறோம் (னு எதிர்பார்க்காதீங்க) ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. ஹையோ ஹையோ இப்படிலாம் யோசிக்கறாங்கப்பா :)

   Delete
 7. //அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் // - எனக்கு அவ்வளவு எதிரிகள் உலகத்தில் இருக்காங்களா இல்லை உங்களுக்கா?

  ReplyDelete
  Replies
  1. சமையல் விஷயத்தில் எனக்கு அநேகமா ரெண்டு எதிரிகள்தான் ஒருவர் தேம்ஸ் கரையிலும் மற்றவர் மிடில் ஈஸ்ட்டில் இருந்து சென்னைக்கு செட்டிலாகி கிச்சன் உரிமையை ஹஸ்பண்டிடம் இருந்து பறிக்க துடிப்பவர் :))))))))) ஹாஹாஹா

   Delete
 8. பருப்புக் கீரை, ஆப்பம், சம்பல், தோரன் எல்லாமே அழகாக வந்திருக்கு. ஒரே இடுகைல நிறைய செய்முறை போட்டீங்கன்னா அப்புறம் போடுவதற்கு ஐட்டமே இல்லாம்ப் போயிடப்போகுது. பார்த்து.

  ReplyDelete
  Replies
  1. இல்லை நெல்லைத்தமிழன் .இந்த குறிப்புக்கள் மற்றவங்க செய்ததை மட்டும் படமெடுத்ததால் ஒன்றா ஒரே தலைப்பில் போட்டேன் ..இது நட்புக்களில் குறிப்பு .நேத்து போடலேன்னா அப்படியே இருந்திருக்கும் படங்கள் :)

   Delete
 9. வல்லாரை உங்க ஊர்ல நிறைய கிடைக்குதா? அடிக்கடி செய்தால் நல்லதுதான்.

  ReplyDelete
  Replies
  1. சின்ன கட்டுன்னா 2 பெரிசுன்னா ஒண்ணு வாராவாரம் வாங்கிடுவேன் ..எங்க வீட்ல கொத்தமல்லி வல்லாரை எப்பவும் இருக்கும் .ஸ்மூத்திக்கு யூஸ் பண்றதால இருந்தது அன்னிக்கு

   Delete
  2. அப்படியே அதன் விலையையும் எழுதினீங்கன்னா, 'எங்க ஊருல இவ்வளவு மலிவா' என்று நினைத்துக்கொண்டே வாங்கலாம்.

   இங்க 8-12 ரூபாய் ஒரு பாக்கெட். ரெண்டு பாக்கெட் வாங்கி வல்லாரைத் துவையல் செய்தால் ஒரு ஃபேமிலிக்கு ஜாஸ்தி (துவையல் சாதம்தான். அதை விட்டா தயிர் சாதம்).

   Delete
  3. இங்கே எல்லா கீரையும் கிலோ கணக்கில் வெயிட் போட்டு தராங்கா .சின்ன கட்டு வல்லாரை£ 1.50 நம்மூர் கணக்கில் 130 ரூபாய் வரும் :)

   Delete
  4. இங்கு ஒரு கிலோ விலை £4.79 அல்லது £4.99.. வல்லாரை பொன்னாங்காணி.. முருங்கி இலை, வாழைப்பொத்தி.. அகத்தி இலை.. இவை அனைத்தும் இதே விலைதான்.

   Delete
  5. இது இலங்கை தமிழ் கடை ரேட்ஸ் .பஞ்சாபியர் கடைல ராஜகிரா கீரை ஒரு பெரிய கட்டு 1.30 வரும்
   மற்ற மல்லி கடுகு மின்ட் வெந்தயம் கீரைங்க 5 கட்டு ஒரு பவுண்ட் இப்போ சீசனுக்கு விற்பாங்க

   Delete
  6. ஓ இதையும் சொல்ல நினைச்சேன் அஞ்சு.. இங்கு இந்தக் கட்டெல்லாம் 3 வன் பவுண்ட்.. 5 எல்லாம் எப்பவுமே இந்தப் பக்கம் கிடையாது.. இது ஏசியன் கடைகளில்.

   ஆனா சூப்பமார்கட்டில் நான் வாங்குவதே இல்லை.. 4 நெட்டாஇக் கட்டிப்போட்டு கொத்தமல்லி 79 பென்ஸ் ரெஸ்கோ வில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதை மணந்து பார்க்க மட்டுமே முடியும். ஆனா இப்போ கொஞ்சக்காலமா எங்கட மொறிசனில் பெரிய கட்டு கொத்தமல்லி 1.50 பென்ஸ் க்கு கிடைக்குது. எனக்கு விலையைக் காட்டிலும், நிறைய குமிச்சு இருக்கும்போதுதான் வாங்கும் ஆசையே வரும்.. கொஞ்சமா.. குட்டிக் கட்டாக இருப்பின் வாங்கும் மனம் வராது.. உள்ளி கூட அப்படித்தான்.

   ஒரு பூண்டு 30 பென்ஸ்.. ஆனா ஏசியன் கடைகளில் ஒரு கிலோ 4.70 ஓ என்னமோ.

   Delete
 10. கமலா ஆரஞ்சு குட்டியா அங்க கிடைக்குதா? (மிடில் ஈஸ்ட்ல சிறிய சாலட்டுக்கு உண்டான ஆரஞ்சு கிடைக்கும். அது ஆலிவ் சைசுல அல்லது அதுக்கு கொஞ்சம் பெருசா இருக்கும்). இதை என்ன பண்ணுவீங்க?

  ReplyDelete
  Replies
  1. இது கமலா ஆரஞ்சு இல்லை ..ஆனா சைனாலருந்து இம்போர்ட்டட் னு பெட்டில இருந்தது ..நம்மூர் அருநெல்லிக்கா சைஸ் தான்தோலை உரிச்சி சாப்பிட்டோம் .விளையும் அதிகம்

   Delete
 11. ///அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்னாப்சாட் வைபர் வாட்ஸாப் ,ஸ்கைப் என பன்முனையிலிருந்தும் கேள்விக்கணைகள் :) //

  ஹல்லோ இப்படியெல்லாம் ஒன்று இருக்குதென ஆரு சொல்லித் தந்தா?:) அதை மட்டும் ஜொள்ளிட்டுத் தொடருங்கோ:).

  ஆவ்வ்வ்வ் என்ன இது ஒரு கல்லில் பல மாங்காயா அவ்வ்வ்வ்வ்... கொஞ்சம் லேட்டா வருவேன் ரெடியா இருங்கோ:))

  ReplyDelete
  Replies
  1. இது ரசித்து ருசித்த குறிப்புக்கள் அதான் மொத்தமா போட்டுட்டேன் மியாவ்

   Delete
  2. நீங்க தானே மியாவ் என்னைய முகப்புத்தகத்துக்கே கூட்டிப்போனது :) அப்போ இதெல்லாம் யார் சொல்லித்தந்திருப்பா ?
   அதோட யூடியூப் காணொளிலாம் எனக்கு இண்ட்ரொட்யூஸ் செஞ்ச புகழும் பெருமையும் உங்களுக்கே :))))))))

   Delete
  3. ஐயா ஜாமீஈஈஈஈஈ பிச்சையே வாணாம்ம்ம்... ... பிடிச்சாலே போதும்ம்ம் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்..

   https://markosun.files.wordpress.com/2014/05/be.jpg

   Delete
 12. //நிறைய குறிப்புக்கள் இருக்கு ஒவ்வொன்றாக வெளிவரும் என்று எனது சமையல் குறிப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் கோடானுகோடி ரசிகப்பெருமக்களுக்கு அறிவிக்கிறேன் .//

  அடுத்தவங்க நிம்மதியா நோய் நொடியின்றி இருந்தால் பிடிக்காதே:).

  //.ஒரு யூ டியூப் சானலும் துவங்கும் யோசனை இருக்கு .//

  ஓ மை கடவுளே.. என்னை செவ்வய்க்கிரகத்தில கொண்டுபோய் இறக்கி விடுங்கோ.. மீ எப்படியாவது தண்ணி இல்லை எனினும் உயிர் வாழ்ந்திடுவேன்ன்.. இங்கிருந்து இதை எல்லாம் பார்ப்பதை விட:)

  ReplyDelete
 13. பருப்புக்கீரை மசியல் எப்படி மஞ்சள் ஆனது? நான் நினைக்கிறேன் கீரையை விட பருப்பு ரொம்ப அதிகம் என..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மியாவ் :) பருப்பும் தேங்காயும் அதிகமாகிடுச்சி அதான் கீரை கண்ணுக்கு தெரில :)
   அது துவரம் பருப்பில்லை :) யெல்லோ mung தால் :) மஞ்சளாதானே வரும் .

   Delete
 14. நெ.தமிழனின் தொக்கு மட்டும் பேஃபெக்ட்டா வந்திருக்கு.. எனக்கொரு டவுட் அவரோட படத்தையே எடுத்து வந்து எடிட் பண்ணிப் போட்டிருக்கிறீங்களோ என.. ச்ச்சோஒ நேக்கு ஸ்டெப் பை ஸ்டெப் அப்டங்கள் வேணும்:) அப்போதான் மீ நம்புவேன்.

  ReplyDelete
  Replies
  1. அவர் கொடுத்த அளவுப்படியே செஞ்சேன் :))
   கர்ர்ர்ர் :)

   Delete
 15. நோ நோ அதிராவின் சீனிச்சம்பல் டப்பூஊஊஉ.. இது தூள் போட்ட வெங்காயக் கறிபோல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. நீங்க வதக்கியது போதாது அஞ்சு.. ஏன் தண்ணியா இருக்கு?.. ஒத்துக்க மாட்டேன்ன்ன் யூ பயேர்ட்:)).. திரும்ப செய்யுங்கோ:)).. ஹா ஹா ஹா:))

  ReplyDelete
  Replies
  1. ம்க்கும் :) காரம் குறைவாத்தான் போட்டேன் மியாவ் ..ஆப்பத்துக்கு கொஞ்சம் ரன்னிங் கன்சிஸ்டன்சி நல்லதுன்னு அப்படியே வச்சிட்டேன்

   Delete
 16. இருப்பினும் நீங்களாவது என் குறிப்பை முயற்சித்தீங்களே அதுக்கு ஒரு

  http://animals.trsty.com/wp-content/uploads/2015/10/how-cute-flower-cat.jpg

  ReplyDelete
  Replies
  1. http://lh3.ggpht.com/-KCp7jpC2C7Y/Utdt0-Y4XQI/AAAAAAAAAGU/ddKToRU9IBA/s1600/Tom_And_Jerry-wallpaper-9764535.jpg

   Delete
  2. http://animals.trsty.com/wp-content/uploads/2015/10/how-cute-flower-cat.jpg

   who is this chubby :)

   Delete
  3. ஹலோ அதிரா நாங்களும் உங்க ரெசிப்பிஸ் சமைப்போம்ல...என்ன படம் எடுத்துப் போடறது இல்லை...ஹிஹிஹி...

   கீதா

   Delete
 17. ஆவ்வ்வ்வ் அப்பம் சூப்பரா வந்திருக்கு அஞ்சு...

  வாழைத்தோல் சம்பல் சூப்பரா இருக்கு நன்றி நன்றி.. இதைத்தான் செய்யச் சொல்லி இப்போ நெ.தமிழனையும் மிரட்டுப் பொட்டு வந்திருக்கிறேன் எ.புளொக்கில்.. எதையுமே செய்ய மாட்டாராம் கர்:))

  இப்போ கிச்சினைத்தருகினம் இல்லை என சாட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார் ஹா ஹா ஹா:))

  ReplyDelete
  Replies
  1. உங்க கமெண்ட் பார்த்தேன் :)) உண்மையில் தோல் சம்பல் நல்ல டேஸ்ட் .நிறைய இரும்பு அப்புறம் நார்சத்து இருக்கு இதில்

   Delete
  2. ஆப்பம் சாதா சட்டியில் செஞ்சா இன்னும் நல்லா வந்திருக்கும் மியாவ் ..நீங்க என்ன சட்டி வச்சிருக்கீங்க ?
   மறக்காம தேங்காய் தண்ணியும் சேருங்க ஆப்பம் கரைக்கும்போது

   Delete
 18. யூலி கட்:) உம் சூப்பர்..

  //எப்படி செய்தாலும் தோல் தோரன் செம ருசிங்க .
  //

  இது இதுதான் டாப்பூஊஊஊஊஊ:))

  ReplyDelete
 19. //அடுத்து வர இருப்பது ஹேஷ் பிரவுன் , மாங்கா ரசம் ,வாழைப்பூ புளிக்குழம்பு இதில் ஒன்று :)//

  ஹையோ கால்ல சுடுதண்ணி பட்டமாதிரிப் பதறி, என் கையிலிருந்த ரீயையும் கீழே ஊத்திட்டேன்ன்... ஆண்டவா .. மயிலேறி வந்து என்னைக் காப்பாத்துங்கோ ஆடி வெள்ளிக்கு கொழுக்கட்டை அவிச்சுத் தருவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. https://i.pinimg.com/736x/00/8e/94/008e94402093014615217b9a8259a808--tom-and-jerry-jerry-oconnell.jpg

   Delete
  2. https://www.cookwithmanali.com/wp-content/uploads/2014/05/Mango-Lassi-Drink-Recipe.jpg

   இந்தாங்க மேங்கோ லஸ்ஸி :)

   Delete
 20. ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்னாப்சாட் வைபர் வாட்ஸாப் ,ஸ்கைப் என பன்முனையிலிருந்தும் கேள்விக்கணைகள் :) //

  ஏஞ்சல் இது உங்க வரிகளாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.....பூஸார் தானே இப்படிச் சொல்லிக் கொள்வார்!! ஹா ஹா ஹா ஹா அதான் கேட்டேன்...சும்மா ...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா கீதா :) அது எல்லாம் சொல்லிக்குடுத்ததே பூஸார் ட்ரெய்னிங் தானே

   Delete
 21. நானும் பருப்பைத் தனியயகத்தான் வேக வைப்போம். பருப்புக் கீரை நிறையவே செய்திருக்கேன். பருப்புக் கீரை குழம்பும், வெந்தயக் குழம்பும், பாலக்காட்டு ஸ்டைல் மாக்கூட்டு என்று செய்வதும் உண்டு ரொம்ப நல்லாருக்கும். சூப்பரா இருக்கு ஏஞ்சல்....

  ஆப்பம் நானும் கொஞ்சம் சாதம் போட்டு அரைப்பதுண்டு. ஈஸ்ட் போடாமலே புளிக்கும். சூப்பரா வந்துருக்கு...

  அதிரா, நெல்லை எல்லோரது குறிப்புகளையும் செய்து பார்த்து போட்டுட்டீங்களே சூப்பர்.

  தோல் தோரன்/துவரன் செமையா இருக்கும் எங்க வீட்டுல அதாவது பிறந்த வீட்டுல உரல்ல போட்டு இடிப்பாங்க....ஹையோ செமையா டேஸ்டா இருக்கும்...இங்க அதெல்லாம் முடிவதில்லை ஆனால் ரெசிப்பி செய்வதுண்டு....அதிராவின் ரெசிப்பிகள் பெரும்பாலும் கேரளத்து ஸ்டைல் போலவே இருக்கும். இலங்கை அதுவும் நார்த் ஈஸ்ட் ரெசிப்பிஸ் கேரளம் நாகர்கோவில் போலவே...அதில் பூகோளமும் கலந்திருக்கு இல்லையா!!!!

  செமையா இருக்கு எல்லாமே ஏஞ்சல்....நிறைய மிஸ்ட் ப்ளாக்ஸ் போணும் ஸோ மத்த கமென்ட்ஸ் பார்த்து நிறைய கமென்ட்ஸ் அடிக்க முடியலை.....உங்கள் எல்லோருடனும் கதைக்க முடியவில்லையேனு வருத்தமும் இருக்கு....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ,எங்கயும் காணலைனதும் நினைச்சேன் ஒன்னு கம்பியூட்டர் இல்லேன்னா பிரயாணம்னு .எல்லாம் செஞ்சிடுவேன் உடனேயே .உங்க கடுகோரை பாகற்காய் உப்புசார் கூட செஞ்சாச்சு படம் எடுக்கலை அதுவும் வரும் விரைவில்

   Delete
 22. ஆவ்வ்வ்.. உங்க போஸ்ட் 3நாள் கழிச்சு பார்க்கவேண்டியிருக்கு.தற்செயலா உங்கபக்கம் பார்த்தேன் அஞ்சு.
  பருப்பு கீரையை பார்த்தா வெந்தயகீரை மாதிரி இருக்கு. மார்கெட்டில் பார்க்கிறேன். நான் பருப்பில் எதுவானாலும் சேர்பதென்றால் தனியவே வேகவைப்பேன். இப்போ வெ.கீரை கிடைக்கிறது. இப்படிதான் செய்வது. நானும் ஆரம்பத்தில் பருப்பை அதிகமாக சேர்த்துவிடுவேன். இப்போ அளவா சேர்ப்பதால் பாதி கீரை,பாதி பருப்பா தெரியும்.
  வாழைக்காய் தோல் சம்பலா , அல்லது வாழைத்தோல் சம்பலா டவுட்.
  2 சம்பலும் . அப்பம் எனக்கு பிடித்தமான உணவு. அடிக்கடி செய்வது. உங்க முறையில் செய்துபார்க்கிறேன் அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா :) ஹாலிடேஸ் ஆரம்பிச்சதான் இப்பதான் பின்னூட்டம் பார்த்தேன் ..வாழைக்காய் இது நேந்திரம் வெரைட்டி ..ஆப்பிரிக்க வாழை ஏசியன் கடைகளில் கிடைக்கும் அதிலும் அப்புறம் நம்மூர் வாழைக்காய் அந்த தோலிலும் செய்யலாம் .பச்சை காய் வாழையில் உள் சதை குறைவு ஆனா நேந்திரம் /ஆப்ரிக்க வெரைட்டியில் உள்ளே மாவு போல் வரும் .இரண்டிலும் செய்யலாம் .
   பருப்பு நான் அளவுதெரியாம ஊறபோட்ருவேன் :)

   Delete
 23. ஹப்பா இதுக்கு அப்புறம் போஸ்ட் இல்லை...நான் பயந்து போய்ட்டேன் ஹையோ நம்ம ஏஞ்சல் புதுசா ரெசிப்பி செஞ்சு படம் போட்டு நாம பதில் சொல்லலைனா நல்லால்லேனு....சரி சரி சீக்கிரம் போடுங்க ஏஞ்சல்...உங்க மத்த ப்ளாக் போறேன் அங்கதான் போஸ்ட் இருக்குனு தோணுது...

  கீதா

  ReplyDelete
 24. ஐயோ பாவம்... கடந்த மூணு மாசமா எதையும் ருசிக்கும்படி செய்யலை போலிருக்கு. அதுதான் ஒரு இடுகையையும் காணோம்... சோர்வடையாதீங்க. உங்க ஹஸ்பண்டை ஏதாவது செய்யச் சொல்லி இங்க இடுகை போடுங்க.

  ReplyDelete
 25. சின்ன வயசு சம்பவம் நினைவுக்கு வந்தது.

  இதோ... கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்கப்போகுது. பாம்பை எடுத்து வெளில விடப்போறேன்..

  மக்களே... உங்களால் முடிஞ்ச காசைத் தாங்க.

  இதோ... கீரி பாம்புச் சண்டை... இதோ...

  அப்படீன்னு ஒரு நாள் முழுக்க கூவி காசு கலெக்ட் பண்ணுவானே தவிர ஒரு நாளும் கீரிக்கும் பாம்புக்கும் சண்டைபோட விடமாட்டான்.

  அது ஏன் இப்போ ஞாபகம் வருது?

  இதோ வந்திட்டேன்... இதோ ஏகப்பட்ட ரெசிப்பிக்கள் போடப்போறேன். இதோ தயார் செய்துட்டேன்.. இனி வரிசையா ரெசிப்பிக்கள் ஒவ்வொரு நாளும் வருது... இதோ தேவதை கிச்சனை தூசு தட்டிட்டேன்...

  அப்படீன்னு ஒரு மோடிமஸ்தி சொல்லிக்கிட்டே இருக்காங்க. அதனால்தான்.

  ReplyDelete