Tuesday, 12 February 2019

வாழைத்தண்டு வெஜிடபிள் சால்னா /Banana stem mixed vegetable salna

தேவதையின் கிச்சனில் இன்றைய ரெசிப்பி யாரும் செய்யாத ரெசிப்பி என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :)
இந்த வாழைத்தண்டு மிக்ஸ்ட் வெஜிடபிள் சால்னா .
இப்போ எல்லாம் வாராவாரம் வாழைத்தண்டு எங்களுக்கு ரெகுலராக கிடைக்கின்றது என்பதை மைக் போட்டு ஸ்கொட்டிஷ்க்காரங்களுக்கு அறிவித்துக்கொள்கின்றேன் :)


                                     வாழைத்தண்டு காய்கறி சால்னா :)
                                                                    

இந்த சால்னாவை முதலில் வெறும் வாழைத்தண்டில் மட்டும் செய்தேன் ருசி சூப் போல வந்தது பிறகு ஒருமுறை முட்டைகோஸ் உடன் சேர்த்து செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது .மூன்றாவது முறை கொஞ்சமா பீன்ஸ் மற்றும் கேரட் சேர்த்து செய்தேன் இதுவும் நன்றாகவே இருந்தது நூலாப்பத்துடன் சாப்பிட .

இப்போ செய்முறைக்கு செல்வோம் 

தேவையான பொருட்கள் 
===========================
கேரட் ,வாழைத்தண்டு ,பீன்ஸ் ,முட்டைகோஸ் .இவற்றை நறுக்கி வைக்கவும் .

                                                                                   

                                                                              

தட்டில் உள்ள அளவு ஒரு வேளைக்கு மூவருக்கு செய்த அளவு .

அடுத்தது தாளித்து வதக்கி அரைக்க 
=======================================

                                                                      

ஒரு கோப்பை வருமளவு  நார்நீக்கி நறுக்கி நீரில் போட்ட வாழைத்தண்டு துண்டுகள் 

                                                                             

பெருஞ்சீரகம் --- 2 தேக்கரண்டி 
வெங்காயம் ---- 1/2 (மீடியம்  போதும் )
பூண்டு --- 2 பற்கள் ..எங்க ஊர் பூண்டு பல் கொஞ்சம் பெரிசு 
இஞ்சி ---சின்ன துண்டு நறுக்கியது 
தேங்காய் ---5 துண்டங்கள் சிறிதாக நறுக்கியது 
 மிளகாய் ---1 அதன் விதைகளை நீக்கி இரண்டா நறுக்கவும் .
தக்காளி துண்டங்கள் --2 ..(இது அதிகம் சேர்த்தா வேற சுவை வரும் )
தாளிக்க --------தேங்காய் எண்ணெய் 
உப்பு ------தேவையான அளவு .

அடுத்தது வாணலியில்  ஒரு தேக்கரண்டிக்கும் கொஞ்சம் அதிகம் தாளிக்க தேங்காய் எண்ணெய் ஊற்றி முதலில் பெருஞ்சீரகத்தை போட்டு வதக்கி பிறகு பூண்டு வாழைத்தண்டு மிளகாய் தக்காளி இஞ்சி ஆகியவற்றை நன்கு வதக்கவும் சிறிது உப்பு சேர்த்து ஒரு கோப்பை நீர் விட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும் .

பிறகு அடுப்பை அணைத்து அந்த கலவை ஆறியபின் நீரை மட்டும் வடிகட்டி எடுக்கவும் 

                                                                         


மீதமுள்ள பொருட்களை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும் .தேங்காய் துருவலாக இருக்கும் பட்சத்தில் வெங்காயமும் இஞ்சி வகைகளும் கொரகொரவென வரும் அதனால்தான் தேங்காய் துண்டுகளை சேர்க்க சொன்னேன் (எனக்கே என்னை நினைச்சா  பெருமையா இருக்கு :))) எவ்ளோ டிப்ஸை அள்ளி அள்ளி தரேன் பாருங்களேன் :)


இதோ இது அரைத்த விழுது 
                                                                      


அடுத்தது ப்ரெஷர் குக்கரை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்  விட்டு அதில் ஒரு பிரிஞ்சி இலை இரண்டு ஏலக்காய் ,சிறு துண்டு பட்டை ,ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும் அதில் நறுக்கி வைத்த காய் வகைகளை சேர்க்கவும் 
                                                                              

                                                                               

இப்போ சிறிது அளவு பார்த்து உப்பு சேர்க்கவும் அத்துடன் ஒரே ஒரு தேக்கரண்டி பிரியாணி மசாலா தூள் அல்லது கரம் மசாலா தூள் சேர்க்கவும் .

                                                                             

கரம் மசாலா காரம் தூக்கலா இருப்பதால் நான் இந்த பிரியாணி மசாலா தூளைத்தான்  குருமா வகைகளுக்கு சேர்க்கின்றேன் .பிறகு அரைத்த விழுதை சேர்த்து  வடிகட்டிய நீர் மற்றும் விருப்பமானால் இன்னொரு கோப்பை நீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும் .ஆவி அடங்கியதும் திறந்து.....


                                                                            




இடியாப்பம் அல்லது ரொட்டி உடன் சாப்பிடலாம் .

இந்த சால்னாவில் வாழைத்தண்டின் சத்து மட்டும் வேண்டுமென்றால் சிறிது கோஸ் மட்டும் சேர்த்து பிற காய்கறிகளை தவிர்க்கவும் .எங்க வீட்டு சின்ன எலி கலர் பார்த்தே சாப்பிடும் இல்லைனா இது சால்னானு நம்பவே மாட்டா அதற்காகவே நான் கேரட் பீன்ஸ் சேர்த்தேன் .அதுபோல் மஞ்சள் தூள் சேர்க்கலை உங்களுக்கு விருப்பம்னா சேர்த்துக்கோங்க .உப்பு அளவா  சேர்க்கவும் .கொஞ்சம் டைம் எடுத்து செய்யும் உணவுதான் ஆனால் சுவை மிகவும் அருமையாக இருந்தது .

அடுத்து வேறொரு ரெசிப்பியுடன் உங்களை சந்திக்கின்றேன் :)






62 comments:

  1. கொஞ்சம் யோசிச்சுதான் படிக்கணும். பூண்டு, சார்னா - இந்த வார்த்தைகளுக்கு தடா

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழன் இதை பாயானு சிலர் சொல்றாங்க ஆனா எனக்கு அந்த வார்த்தை பிடிக்கலை அதான் சால்னா ஆக்கினேன் .குருமானா நிறைய காய்கறி இருக்கும் :)

      Delete
    2. ஓஓஓஒ நோஓஓஓ மீதான் 1ஸ்ட்டூஊஊஊ:) லீவாச்சே என கொஞ்ச நேரம் கண்ணீ மூடி முழிப்பதற்குள் அசம்பாவிதமாகிட்டுதே கர்ர்ர்ர்ர்:)

      Delete
    3. ஹாஹா :) இதுக்கு போட்டியா உங்களால் அடுத்த வீக் போஸ்ட் போடமுடியாதே :) ஹெஹெ என்னை தூங்க விடாம பண்ண முடியாதே ஹாஹாங்ஹா

      Delete
  2. வித்தியாசமான ரெசிப்பி.... பார்க்கலாம் செய்வேனா என

    ReplyDelete
    Replies
    1. பூண்டு வேணம்னா சூப் ஆக்கிடுங்க :) தேங்காய் மட்டும் சேர்த்து கூட வறுத்து அரைத்த மிளகு சீரகம் சேர்த்துக்கோங்க

      Delete
  3. நாங்கள்லாம் காய்கறி மிஞ்சினா அவியல் பண்ணற மாதிரி லண்டன், சால்னா பண்ணறாங்களா அதிரா?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா :) நான் உணவு விஷயத்தில் ரொம்ப கவனம் ..எதையும் வீண் செய்வதேயில்லை அதேபோல வச்சி வச்சி ப்ரிட்ஜில் வச்சி சாப்பிடும் பழக்கமுமில்லை ..கொஞ்சமா செஞ்சி ஒரு வேளைக்கு சாப்பிட்டு முடிச்சிடுவோம்

      Delete
    2. ஹையோ நான் நிறையச் செய்து ஃபிரிஜ்ஜில வச்சு நான் மட்டுமே சாப்பிட்டு, பின்பு கொட்டி.. இப்போதான் ஓரளவு கொஞ்சமாகச் செய்யப் பழகி வருகிறேன்..

      Delete
    3. //நாங்கள்லாம் காய்கறி மிஞ்சினா அவியல் பண்ணற மாதிரி லண்டன், சால்னா பண்ணறாங்களா அதிரா?//

      அதே அதே... பேரை மட்டும் புதுசா வச்சு எங்களை எல்லாம் மருந்தடிச்ச பூச்சிபோல மயங்க வைக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதற்குள் அரிசியைச் சேர்த்தால் என் குழை சாதம்:)) ஹா ஹா ஹா.. அந்தப் பெயரைக் கேட்டா மட்டும் எல்லோரும் அடிக்க வாறாங்க:).

      Delete
    4. அவ்வ் அந்த பேரை கேட்டாலோ பார்த்தாலோ எனக்கு கண்ணு தெரியமாட்டேங்குது

      Delete
    5. அதிரா... இந்த சூப்பில் அரிசியைச் சேர்த்தா குழை அரிசினா வரும். சாதம் சேர்த்தால் குழை சாதம் வரும்.

      செய்யற உங்களுக்கே இவ்வளவு டவுட்டுனா நாங்க எப்படிச் செய்துபார்ப்போம்?

      Delete
    6. நெல்லைத்தமிழன் எனக்கு நீடி வேணும்:).. சால்னா என்றால் என்ன எனக் கேய்க்கவே மாட்டேனென்கிறீங்க கர்ர்ர்:) ஆனா குழை சாதத்துக்கு மட்டும் விளக்கம் கேட்கிறீங்க விடமாட்டேன்ன் இப்பவே போகிறேன் பிரித்தானியக் காண்ட் கோர்ட்ட்டுக்கு:).. விடுங்கோ அஞ்சு என் கையை விடுங்கோ தடுக்காதீங்கோ:)..

      Delete
  4. இடியாப்பம் நீங்க செஞ்சதா? நல்லா வந்திருக்கு. ரெசிப்பி எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. அவ்வ் :) இது மாவு கேரளா ஷாப்பில் பெரியார் பிராண்ட் வாங்கி செஞ்சது :) ஈசிதானேனு அதுக்கு ரெசிப்பி போடல்லை .சரி இன்னொரு பதிவுக்கு டாபிக் ரெடி :)

      Delete
    2. அல்லோ ரெடிமேட் மாவில செய்து ரெசிப்பி போடக்கூடா:) எங்களைப்போல பச்சை மா வாஅங்கி, பதமா அவிச்சு, அதனுள் அரிசிமாக் கலந்து செய்து போடோணுமாக்கும்:).

      Delete
    3. பச்ச மா வாங்கி, அரிசி மா கலக்கணுமா? இது என்ன சாராயத்தை விட மோசமான ரெசிப்பியா இருக்கே

      Delete
    4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) பச்சைக் கோதுமை மா வாங்கி, அதனைப் பதமா அவிச்சு அரிச்சு, வறுத்த அரிசிமாவோடு கலந்து ரின் இல் போட்டு வைப்போம், பின்பு டக் டிக் டோஸ் என 20 நிமிடத்தில் இடியப்பம் ரெடி:).

      Delete
  5. //என்னோட சொந்த முயற்சியில் செய்த ரெசிப்பி :)//

    அப்போ இவ்ளோ காலமும் இரவல் ரெசிப்பியா ஆவ்வ்வ்வ்வ்வ்வ் நெல்லைத்தமிழன் நோட் திஸ் கோல்டன் பொயிண்ட்:)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர் மியாவ் :) இதுவறைக்கும் யாரும் வாழைத்தண்டில் இந்த குருமா செஞ்சதில்லை அதான் OWN ஐடியானு சொன்னேன்

      Delete
    2. அதிரா.. அதுக்கு அர்த்தம், இடையில் காய் கருகி இல்லை தண்ணீர் பொங்கி ஃபயர் அலார்ம் அடிச்சு ஹஸ்பன்ட் வந்து சரி செய்து உணவைத் தயாரித்து முடித்தார் என்று எப்போதும்போல் இல்லாமல், இந்தத்தடவை நானே செய்துமுடித்தேன் (உலக அதிசயமாக) என்று அர்த்தம். ஹையோ ஹையோ

      Delete
    3. garrrrr 4
      நெல்லைத் தமிழன் :)

      Delete
    4. ஆஹா! போஸ்ட்டை விட இந்த காலை வாருதல்கள் சூப்பரா இருக்கே! :-)

      Delete
  6. //இப்போ எல்லாம் வாராவாரம் வாழைத்தண்டு எங்களுக்கு ரெகுலராக கிடைக்கின்றது என்பதை மைக் போட்டு ஸ்கொட்டிஷ்க்காரங்களுக்கு அறிவித்துக்கொள்கின்றேன் :)//

    அல்ல்ல்ல்லோஒ எனக்கு புகையேல்லையாக்கும்... எதுக்கும் இருங்கோ ஒரு கப் மோர் குடிச்சிட்டுத்தொடர்றேன்ன்ன்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    கிடைக்குதே என்பதற்காக அதிகம் சாப்பிடுவது நல்லதோ தெரியல்ல, பிரேக் எடுங்கோ:).

    ReplyDelete
    Replies
    1. ஒரு தண்டு வாங்கினா வெள்ளி சனிக்கிழமைக்குள்ள முடிச்சிடுவேன் மியாவ் .உடம்புக்கு நல்லதுதானே .சூப் அதில் ப்ரைட் ரைஸ் கூட செஞ்சேன் :) எனக்கு ரொம்ப பிடிக்கிது இதோட சுவை

      Delete
    2. ஏஞ்சல் எனக்கும் வா த ரொம்பப் பிடிக்கும்...தயிர் பச்சடி கூடச் செய்யலாம். புளிப்புக் கூட்டு..புளிவிட்ட பொரிச்ச கூட்டு, புளியில்லா பொரிச்ச கூட்டு.கொண்டைக்கடலை சேர்த்தும் சேர்க்காமலும்....வாழைத்தண்டு மோர்க்கூட்டு, மோர்க்குழம்பு, அவியல் போல, சாலட், தோரன், என்று உங்களுக்கும் தெரிஞ்சுருக்கும்

      கீதா

      Delete
  7. //வாழைத்தண்டு காய்கறி சால்னா :)//

    ச்ச்ச்ச்ச்ச்சும்மா வாழைத்தண்டைச்சொல்லி நம்மை உசுப்பேத்துறா யுவர் அனர்:) அப்போ வாழைத்தண்டு என்பது காய்கறி இல்லையோ:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஏன் கரட் காய்கறி சால்னா எனச் சொல்லல்ல... விடுங்கோ நேக்கு இதுக்கு நீடி வேணும்ம்ம்ம்ம்:).

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ் :) தனியாவும் செய்யலாம்னு சொல்லியிருக்கேன் .இது வெஜிடபிள்ஸ் வீட்டு குட்டி எலிக்காக

      Delete
    2. யூ மீன் கொத்தமல்லி!

      Delete
  8. //நூலாப்பத்துடன் சாப்பிட//

    இது ரைஸ் நூடில்ஸ் யையா சொல்றீங்க?

    ReplyDelete
    Replies
    1. கேரளாவில் இடியாப்பத்தை நூல் + அப்பம் =நூலப்பம்னு சொல்லுவாங்க மியாவ் :)
      இது ரைஸ் நூடுல்சுக்கும் நல்லா இருக்கும் .

      ஆங்கிலத்தில் ஸ்ட்ரிங் ஹாப்பர்ஸ் னு சொல்றதை நூலாப்பம்னு சொல்றாங்கன்னு நினைக்கின்றேன்

      Delete
    2. ஓ ஃபுரூட் லங்குவேஜ் மாதிரி ஹா ஹா ஹா:).

      Delete
    3. yes yes :) like needle gone :)

      Delete
    4. அதே அதே....ஏஞ்சல் நான் சேவை பதிவு எழுதியிருந்தேன்...பாருங்க அதை அமெரிக்கர் ஒருவருக்குச் சொல்ல அதுவும் அவர் என் சேவை நாழி பார்த்துட்டு ஆச்சரியப்பட்டு கேட்க நான் விளக்க அதுக்கு ரைஸ் நூடுல்ஸ்/ரைஸ் ஸ்டிரிங்க் ஹாப்பர்னு சொல்லி விளக்கினேன்..அவர் உடனே இப்ப செஞ்சு காட்டி எனக்குத் தரமுடியுமானு கேட்க நான் ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ் நு மயங்கிட்டேன்...உடனே செய்யறது கஷ்டம்...சொன்னேன் ஊறவைச்சு அரைக்கனும்...அரைத்து பால்ஸ் செஞ்சு ஸ்டீம் செஞ்சு பிழியனுன்னு ...ரெடிமெடா கிடைக்குத்னுனாலும் அவருக்கு அது புரிந்தது ஆனால் எப்படி பிழ்வதுன்றது அந்த ப்ரொஸீஜர் பார்க்க விருப்பப்பட்டார்..அவர் காத்திருக்கத் தயார் என்றால் செஞ்சு தரேன்னு சொன்னேன்..அவருக்கு நேரம் இல்லை...ஸோ...

      கீதா

      Delete
    5. like needle gone :)//

      ஹா ஹா ஹா ஊசிப்போனதுக்கு இது எங்க வீட்டுலயும் இப்படியான லேங்குவேஜ் சொல்லிப்போம் ....ஹா ஹா அப்புறம் டிக்கெட் வாங்கிடுச்சுன்னும் சொல்லுவோம்

      கீதா

      Delete
  9. என்ன அஞ்சு அது கரட்டா? வோட்டமிலன் துண்டுபோல அவ்ளோ ரெட் ஆ இருக்கே.. இங்கு ஒரேஞ் கலரில மட்டும்தானே கிடைக்குது, ரெட் கலரில காணவே இல்லை, இந்தியாவிலும் கிடைக்குதாம்.. எங்கோ பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இது ஆர்கானிக் கேரட் மியாவ் .லைட் வெளிச்சத்தில் பளீர்னு தெரியுது .எனக்கு கூல் லைட் கண்ணுக்கு ஒத்துக்காது அதனால் எல்லா ரூமிலும் யெல்லோ வார்ம் லைட் தான் போட்டிருக்கோம் அதனால்தான் அந்த கலரில் தெரியுது .நீங்க சொல்றது ஊட்டி கேரட் pusa kesar carrot னு சொல்வாங்க இங்கே பஞ்சாபியர் கடையில் கிடைக்குது

      Delete
    2. இல்ல அஞ்சு இங்கு ஓகானிக்கும் மஞ்சள்தான்.. என்ன தான் லைட் இல்லை எனினும் இப்படிக் கலர் காணவில்லை நான்.

      Delete
    3. அதிரா இங்கு ஊட்டி டெல்லி காரட் நு இப்படி அழ்கான நிறத்தில் கிடைக்கும்....டெல்லி காரெட்டில் அல்வா செஞ்சா சூப்பரா இருக்கும்..இங்கு டெல்லி காரெட் கிலோ 30-40 தான்...நல்லா கிடைக்குது...

      கீதா

      Delete
    4. இங்கும் கரட் சரியான மலிவு கீதா, ஒரு கிலோ 60..65 சதம் அப்படி. ஆனாலும் உங்களிடம் மலிவுதான்.

      Delete
  10. உங்கட வாழித்தண்டு எவ்ளோ ஃபிரெஸ் ஆ இருக்கு.. இங்கு நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது.

    ///(எனக்கே என்னை நினைச்சா பெருமையா இருக்கு :))) எவ்ளோ டிப்ஸை அள்ளி அள்ளி தரேன் பாருங்களேன் :)///
    ஹையோ விடுங்கோ என் கையை விடுங்கோ என்னை ஆரும் இப்போ தடுத்தீங்க இங்கின ஒரு கொலையே நடந்திடும்.. விடுங்கோ இதுக்கு மேலயும் இந்த உசிறு:) உடம்பில இருக்குமெண்டோ நினைக்கிறீங்க:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா தாங்க முடியல்ல ஜாமீஈஈஈ:).

    ReplyDelete
    Replies
    1. இது நேத்து நைட் செஞ்சது அப்போ பாருங்க வெள்ளிக்கிழமை வாங்கினது :) அந்த டிஸ்யூ தாளில் சுத்தணும் இல்லேனா கெட்டுடும்

      Delete
    2. சரி சரி கூல் கூல் ஒரு கப் வாழைத்தண்டு சூப் தரேன் அங்கே காகிதப்பூக்களில் :)

      Delete
  11. ஆனா சூப்பராக வந்திருக்குது கறி, பார்க்க ஆசையாக இருக்கு.. ஏன் வாழைத்தண்டு வாயில் கடிபடும் என்பதால அவித்து வடிகட்டி எடுக்கிறீங்களோ? தேங்காயோடு அரைத்துச் சேர்த்தால் என்ன.. நார்ச் சத்தும் வீணாகாதென நினைக்கிறேன் அரைத்துச் சேர்த்தால்.

    இடியப்பத்துக்கு சூப்பராகத்தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹலோவ் மியாவ் தண்ணியை வடிகட்டினத்துக்கு ரீஸன் அரைக்கும்போது தெளிக்கும் .அந்த தண்டு துண்டொட்தான் அரைச்சேன் எதையும் வீசலியே

      Delete
    2. மியாவ் உண்மையா சுவை நல்லா இருக்கு .கமகம வாசத்தோட

      Delete
  12. வாழைத்தண்டு கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். கிடைத்தால் செய்து விடலாம். சப்பாத்தி உடன் சாப்பிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் .செய்து பாருங்க உங்களுக்கு மிகவும் பிடிக்கும் .பூண்டு இஞ்சி கொஞ்சூண்டு சேர்த்தா போதும் .எங்க வீட்ல குழந்தைங்க சாப்பிடும் பக்குவத்தில் தான் நான் காரம் சேர்ப்பேன் .

      Delete
    2. சப்பாத்தியுடன் ரொம்ப சுவையா இருந்ததுன்னு கணவரும் மகளும் சொன்னாங்க .

      Delete
  13. நல்லா வந்திருக்கு போல குருமா...பார்க்க கலர்புல்லா கவர்ச்சியா இருக்கு. ஆனா எனக்கு பீன்ஸ் பிடிக்காது! என்ன செய்ய, அதைத்தவிர்க்க முடியாதே!

    ReplyDelete
    Replies
    1. பீன்ஸ் வேணாம்னா தவிர்க்கலாம் வெறும் முட்டைகோஸ் மட்டும் போடலாம் இல்லைனா வெறும் வாழைத்தண்டை மட்டும் மசாலா அரைத்தும் செய்யலாம் :) நானா கலர்புல்லா செய்தது எங்க வீட்டி குட்டி எலிக்காக :)

      Delete
  14. ஹா.. ஹா.. ஹா... உங்களுக்கே உங்களை நினைத்தால் பெருமையாய் இருக்கா? நமது அனுபவத்தில் வருபவற்றைச் சொல்வதில் பாண்டித்யம் தானாய் வந்துவிடுமே!

    ReplyDelete
    Replies
    1. ஹஹ்ஹா :) ஆமா :) அதேதான் ..என் கணவர் அவர் அக்காகிட்ட பெருமையா சொல்லிட்டிருந்தார் :)//இப்போல்லாம் ---விதமா விதமா சமையல் வெஜிடேரியனில் னு :))

      Delete
    2. வாவ்! க்ரெடிட்ஸ் உங்க கணவர்கிட்டருந்து!! சூப்பர் ஏஞ்சல் கலக்குங்க!!!

      கீதா

      Delete
  15. உண்மையில் வாழைத்தண்டுடன் இவ்வளவு பொருட்கள் சேர்த்தால் வாழைத்தண்டின் சுவையே தெரியாதே...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம் அதனால்தான் மூணு விதமா செஞ்சிருக்கேன் முதல் விதத்தில் வெறும் வாழைத்தண்டு வித் தேங்காய் இஞ்சி பூண்டி மிளகாய் மசாலாவா அரைச்சி செய்யணும் .இது நீர்க்க வந்தாலும் நல்லா இருக்கும் அப்புறம் வெறும் கோஸ் அப்புறம் கொஞ்சம் வெஜிஸ் :) எப்படி செஞ்சாலும் ருசியா இருக்கு

      Delete
  16. வெஜிடபிள் குருமா என்று சொல்லலாமா? என்றாலும் பூண்டு இல்லாமல் செய்யலாம். வாழைத்தண்டு இங்கே அடிக்கடி கிடைக்கும். வாழைத்தண்டு மட்டும் போட்டுக் குருமா செய்வது உண்டு. பூண்டு சேர்க்காமல். காமாட்சி அம்மா வாழைத்தண்டில் பிட்லை செய்திருந்தார்கள். அது ஒருமுறையாவது செய்து பார்க்கணும். முடியறதில்லை.

    ReplyDelete
  17. எங்கே உங்களை என்னோட திருநெல்வேலிப் பயணப்பதிவுகளில் காணவே முடியலை? ஸ்ரீராமும் வரலை!

    ReplyDelete
    Replies
    1. சர்ச் போயிட்டு வரேன் இங்கும் அங்கும் :)

      Delete
  18. ஏஞ்சல் இதை நான் குருமா என்பேன்...வாழைத்தண்டு மட்டும் போட்டு அதாவது தக்காளி வெங்காயம் தேங்காய் எல்லாம் உண்டு....வா த மட்டும் போட்டு...அப்புறம் நீங்க சொல்லிருக்காப்ல மிக்ஸட் வெஜ்ஜிஸ்..

    நான் தேங்காயுடன் கொஞ்சம் பொட்டுக் கடலையும் வைத்து அரைப்பேன். ஆனால் வாழைத்தண்டை அரைத்துச் செய்ததில்லை அப்படியே வெஜ்ஜிஸ் ஓடு சேர்த்துச் செஞ்சுருக்கேன். மற்றபடி இன்கீரீடியன்ட்ஸ் எல்லாம் இதே மெத்தடும் இதே...அரைப்பது மட்டும் தான் வித்தியாசம்...நானும் இதை இடியாப்பம், ஆப்பம் சப்பாத்திக்கும் கூட சைட் டிஷ்....

    உங்கள் குறிப்புகளை நோட் செய்து கொண்டேன்...குறிப்பா அந்த அரைத்தல் மட்டும்....

    நான் மஞ்சப்பொடி சேர்ப்பதுண்டு ஏஞ்சல்....

    மணக்குது செமையா!!! கண்டிப்பா அரைச்சு செஞ்சுடறேன்...பார்க்கவே சூப்பரா யம்மியா இருக்கு ஏஞ்சல்...அங்க் வா த சூப்...இங்க சால்னா...இதை பாயானும் சொல்லுவாங்கதானே இல்லையா? நான் பார்த்த வரைல பாயா, சால்னா, குருமா எல்லாம் கிட்டத்தட்ட சேம்தான் இல்லையோ?!!

    கீதா

    ReplyDelete
  19. இந்த ரெசிப்பி ஊரிலிருக்கும்போது பார்த்திருந்தா செய்திருக்கலாம். இங்கன தேடிபார்க்கனும் வாழைதண்டை. வருதா தெரியலியே. கேட்கனும். கலர்புல்லா, ஈசியா இருக்கு உங்க ரெசிப்பி..

    ReplyDelete
  20. அருமையா இருக்கு ...

    ஆன நான் வாழைத்தண்டு போட்டு இப்படி அரைத்து குருமா செஞ்சது இல்ல ஆன துவையல் செய்வோம் ..

    இதுவும் புதுசா இருக்கு ...

    அந்த பிரியாணி மசாலா ..நானும் சேர்ப்பேன் gravey ல கொஞ்சமா ..சூப்பரா இருக்கும்

    ReplyDelete