Monday, 7 October 2019

மாங்காய் ரசம் / Mango rasam

மாங்காய்  ரசம் 🌿
===============


                                                                                        


கீதாக்கா வரிசையா ரசம் வகைகளில் கலக்கிட்டிருக்காங்க :)இதை இப்போ பதிவிடல்லேனா என் சான்ஸ் போய்டும் என்பதால் டிராஃப்டில் இருந்ததை சட்டுன்னு பப்ளீஷறேன் :)தேவையான பொருட்கள் 
---------------------------------------------

                                                                              இனிப்புமில்லா புளிப்புமில்லா 
                        செங்காய் மாங்காய்    = 1

கொக்கம் புளி   == 5-6 துண்டுகள் 


https://paperflowerskitchen.blogspot.com/2018/06/kokum-rasam.html

பச்சை மிளகாய் = 1
தாளிக்க  = கடுகு + வெந்தயம் = ஒரு தேக்கரண்டி 
எண்ணெய் = தேவையான அளவு 
உப்பு = தேவையான அளவு 

வறுத்து அரைக்க  
--------------------------------
மிளகு ,சீரகம் , கொத்தமல்லி விதை  = தலா ஒரு தேக்கரண்டி 

இரண்டு காய்ந்த மிளகாய் 
ரசப்பொடி =  1 தேக்கரண்டி 
அலங்கரிக்க = கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை .

செய்முறை 
---------------------

                                                                              

மாங்காயை தோல் மற்றும் விதையை   நீக்கி  கொக்கம் மற்றும் விதை நீக்கிய பச்சை மிளகாய் சேர்த்து  மூழ்கும் வரை நீர் சேர்த்து குழைய  வேக வைக்கவும் .
நான் முதலில் தோலுடன் வேக வைத்து பிறகு ஸ்பூனால்  சதையை வழித்து எடுத்தேன் .அடுத்தமுறை தோலை சீவிட்டு வேக வைத்தது சுலபமா இருந்தது . பிறகு அனைத்தையும் மத்தால் மசிக்கவும் .
நான் பாதி மசிந்ததும் படமெடுத்தேன் :)
கொக்கம் ஈர வகை என்பதால் நீரில் கரைஞ்சிடும் கொஞ்சூண்டு சக்கை மிஞ்சும் அதை வீச வேண்டாம் ரசத்தில் கீழே தங்கிடும் .

                                                                                

இதை ஒரு கோப்பையில் எடுத்து வைக்கவும் .

வறுத்து  அரைக்க கொடுத்தவற்றை எண்ணெய் வாணலியில் சூடாக்கி வறுத்து மிக்சியில் அரைக்கவும் .

பிறகு அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து அதில் 
வறுத்தரைத்த பொருட்கள் சேர்த்து அத்துடன் மாம்பழ பேஸ்ட்டையும் சேர்த்து ஒரு கப் நீரும் கொஞ்சம் ரசப்பொடியும்  சேர்த்து கொதிக்கவிடவும் .
கொக்கமில் இது ஈர வெரைட்டி அதனால் அதில் உப்பு இருப்பதால் ,ரசத்தில் உப்பு அளவு பார்த்து சேர்க்கவும் .ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும் .

காரம் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகு கூடவோ குறையவோ சேர்க்கலாம் . ரசப்பொடி சேர்ப்பதால் நான் துவரம்பருப்பு நீர் சேர்க்கலை .
இதே முறையில் ஆப்பிள் ரசம் செய்ய ஒரு ஐடியா இருக்கு  பார்ப்போம் :) புளித்த பச்சை ஆப்பிள் கிடைச்சா செய்துவிட்டு சொல்கிறேன் 

அடுத்து வேறொரு சமையல் பதிவில் உங்களை சந்திக்கின்றேன் :)

76 comments:


 1. மீ பர்ஸ்ட்டா ?

  ReplyDelete
  Replies
  1. அஆவ் !!! ரசம் குடிக்க வந்த அனைவருக்கும்  வணக்கம்ஸ் :))#வாங்க ட்ரூத் வாங்க நீங்கதான் firstttttt 

   Delete

 2. இந்த கால பொண்ணுங்க வழக்கமான உணவு வகைகளை நன்றாக சமைக்கிறார்களோ இல்லியோ ஆனால் இப்படி புதுசு புதுசா ஏதாவது செய்ய ஆரம்பிச்சிடுறாங்க காரணம் யாரும் நல்லா இல்லைன்னு சொல்ல முடியாது கேட்டால் இதன் டேஸ்ட் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி சமாளிக்கிறாங்க... ஹும்ம்

  ReplyDelete
  Replies
  1. ஷ்ஷ்ஷ்ஹ்ஹ் :) எங்க கம்பெனி ரகசியத்தை இப்படி பப்லிக்க்ல போட்டு உடைக்கலாமா ட்ரூத் :))அது புது விதமா யோசிக்கிறது நாங்க  புரிஞ்சுதா :))

   Delete
  2. ஹா ஹா ஹா மதுரை ஏஞ்சல் சொல்லிப்போட்டாங்க நானும் பெரும்பாலும் இந்த தெக்கினிக்கிதான்!!! ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  3. ஆனால் வீட்டில் மெனு அப்ரூவல் இல்லை என்றால் செய்ய முடியாது. மெனு பெரும்பாலும் மற்றவர்கள் தான் டிசைட் செய்வாங்க...எல்லோருமே எதுவும் பிடிக்காது என்ற ரகம் இல்லையாதலால் புது முயற்சிகளை வரவேற்கவும் செய்வாங்க என்பதால் அப்ரூவல் கிடைச்சிரும்..ஹிஹிஹி....

   கீதா

   Delete
  4. எங்காத்து மாமி ஏஞ்சல் மாதிரி எதாவது புதுமையா செஞ்சால் இரண்டு நாளைக்கு என் மூஞ்சி கடு கடுன்னு இருக்கும் மேலும் அதை சொல்லி இரண்டு க்ளாஸ் சரக்கு உள்ளே போகும்

   Delete
 3. இந்த ரிசிப்பி மட்டும் அதிரா கண்ணில பட்டுற கூடாது ஒரு வேளை பட்டுறுச்சுன்னா... உடனே போட்டிக்கு களத்தில் குதித்து வாழைப்பழம் ரசம் என்று ஏதாவது பண்ணிடுவாங்க

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) அநேகமா க்ரான்பெரி ரசம் வரக்கூடும் :)))

   Delete
 4. ஹை ஏஞ்சல் தேவதை கிச்சன் ஓப்பன் ஆகிடுச்சா! சூப்பர்

  ஆமாம் கீதாக்கா கலக்கிட்டிருக்காங்க...இனிதான் ஆன் பனீர் ரசம் எல்லாம் போய் பார்க்கணும்.


  ரசம் சூப்பர் ரொம்ப நல்லா செஞ்ச்ருக்கீங்க ஏஞ்சல்...பாராட்டுகள்!!!
  மாங்காய் ரசம் செஞ்சுருக்கேன்...கூட புளி அல்லது கோக்கம் சேர்க்காம மாங்கா புளிப்பிலேயே...பருப்பு ஒரு ஸ்பூன் வேக வைத்ததை நல்லா மசித்து சேர்த்துச் செய்வதுண்டு.

  கோக்கம் ரசம் செஞ்சுருக்கேன் நானும் கோக்கம் சேர்த்தா சர்க்கை தூரப் போடுவதில்லை அதிலேயே விருட்டுருவேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா திறப்பு விழா நடந்து இது மூணாவது போஸ்ட் :)

   Delete
  2. ஹையோ!! பார்க்கிறேன் ஏஞ்சல் மற்ற ரெண்டையும் கண்டிப்பா...நெட் படுத்துது அப்பப்ப ஸோ மற்ற தளங்களும் போணுமேனு சுத்துவதில் மீண்டும் இங்கு வர இயலாமல் போய்டுது. இன்று கண்டிப்பா காலை ஆஜர் வைக்கும் கடமையை முடிச்சுட்டு இங்கு வரணும்னு வந்தாச்சு...அதையும் பார்க்கிறேன்...புதன் வேறு இன்று உங்க கேள்விகள் அதிரா நெல்லைன்னு கும்மி வேறு...ஹா ஹா ஹா

   கீதா

   Delete
 5. இப்படியும் செஞ்சு பார்த்துவிடுகிறேன்.

  கோக்கம் ரசம் செஞ்சுருக்கேன் ஆனா மாங்கா ரசத்துக்குப் போட்டதில்லை. அதே போல ரசப்பொடி சேர்த்தா அப்புறம் பொடி பொடித்துப் போட்டதில்லை இந்த ரசத்துக்கு. பொடி போடலைனா கொ ம மிளகு ஜீரகம் து ப மட்டும் வறுத்து பொடித்து போட்டுருவேன்.

  கோக்கம் பொட்டா உப்பு பார்த்து போடணும் அதிலும் உப்பு இருக்குமே...

  நானும் பச்சை புளிப்பு ஆப்பிள் ரசம், சட்னியும் செஞ்சுருக்கேன்.

  அப்புறம் மாதுளை ரசம், இது மாமியார் செய்வாங்க தெரிஞ்சுக்கிட்டேன் (கொழுமிச்சை ரசம் நார்த்தை ரசம் (இந்த இரண்டும் கிட்டத்தட்ட ஒரே போல இருக்கும்..) ஆரஞ்சு ரசம், பைனாப்பிள் ரசம், முருங்கை ரசம், நெல்லிக்காய் ரசம் நு அப்பப்ப எது கிடைக்குதோ அது ...சிலது நம்ம முயற்சி ஹிஹிஹி

  ஏஞ்சல் கலக்கறீங்க போங்க!!! உங்க பச்சை ஆப்பிள் ரசம் போடுங்க சீக்கிரம்..

  இந்த முறையும் நோட் பண்ணி வைச்சுக்கிட்டேன் செஞ்சுட்டு படம் போடறேன்...மறந்துவிட்டேன் கர்நாடகா ரசங்கள் அதான் பங்களூர் ரசம், மைசூர் உடுப்பி ரசம் தவிர வேறு எந்த ரசத்துக்கும் வெந்தயம் சேர்த்ததில்லை...அதுவும் நோட்டட்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா நான் பருப்பு நீரோ இல்லை பருப்போ சேர்களை அதனால்தான் ரசப்பொடி கொஞ்சூண்டு சேர்த்தேன் கொக்கம் காய்ந்தது புளிப்பு அதிகம் ஆனா உப்பு சேர்த்த வெரைட்டியில் புளிப்பு கம்மி அதான் சேர்த்தேன் 

   Delete
  2. நெல்லிக்காய் ரசம் செய்தேன். ஆனால் எங்க இரண்டு பேருக்குமே பிடிக்கலை. மற்றபடி ஆரஞ்சில் எல்லாம் ரசம் செய்தது இல்லை.

   Delete
  3. பெரிய நீர் நெல்லிதான் இங்கே கிடைக்குது அது புளிப்போ புளி நம்மூர் நெல்லி கிடைச்சா நல்லா இருக்கும் .நீங்க வேகவைச்சி பருப்பு கூட சேர்த்து செய்திங்களா ?

   Delete
  4. நெல்லிக்காயை முழுசா எல்லாம் போடலை! நெல்லிக்காயை வேக வைத்துக் கொண்டு அந்த நீரில் மட்டும் தான் ரசம் செய்தேன். அதுவே நல்லா வரலை! :(

   Delete
  5. கீதாக்கா காட்டு நெல்லிக்காய்வை விட அருனெல்லி ரசம் நல்லாருக்கும்.

   மாமியார் செய்வாங்க அது போல அருனெல்லி ஜூஸும் எடுத்து சர்க்கரைப் பாகு செர்த்து கலந்து வைப்பாங்க லீவில் பசங்க எல்லாரும் குடிப்பாங்க.

   வீட்டில் முன்பு அருநெல்லி மரம் இருந்தது...

   கீதா

   Delete
  6. ஏஞ்சல் அருநெல்லி கிடைச்சா ஸ்டீம் பண்ணிக்கோங்க. ஆனா அங்கு கிடைக்காது இல்லையா? கொஞ்சம் அப்படியே போட்டுக்கோங்க மீதியை அரைத்து....புளி அல்லது கோக்கம் ரெண்டுமே நல்லாருக்கும்..ஆனா கொஞ்சமா சேர்க்கனும்....பருப்பு நீர் சேர்த்தா போதும். கொஞ்சமே கொஞ்சம் பருப்பு அதை மசித்து நீருடன் சேர்த்து பருப்பு அதிகம் இல்லாமல்...

   கீதா

   Delete
  7. ஆமாம் பருப்பு/ ப நீர் சேர்க்கலை நீங்க..ஓகே அதனால் பொடி இல்லையா ஓகே நோட்டட்...

   நம் வீட்டில் மாங்காய் நிறைய காய்க்கும் அதான் மாமியார் வீட்டில் ஸோ பாதி புளிப்பு இனிப்புனு ஹாஃப்ரைப் மாங்கா இதுக்கு செமையா இருக்கும். அதுவும் வீட்டு மாங்காய் செம டேஸ்டியா இருக்கும் பழமும். அத்தனை ருசியா இருக்கும்

   கீதா

   Delete
  8. உங்க புடலங்காய் தோசை செய்து படம் எடுத்து அதை எபி யில் நம் ரெசிப்பி வரும் போது அதோடு போடணும்னு வைச்சுருக்கேன் போன ரெசிப்பியில் சேர்க்க விட்டுப் போச்சு இந்த முறையாவது அனுப்பும் போது சேர்த்து அனுப்பனும்...

   கூடவே இந்த ரசமும்...

   கீதா

   Delete
 6. ஒவ்வொரு கருத்து அடிச்சு பப்ளிஷ் பண்ணும் போதும் நெட் போயிருது திரும்ப ரெஃப்ரெஷ் செஞ்சு செஞ்சு போட கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....நெட் ரொம்ப படுத்தல்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்லம் இல்லை கீதா நேரமிருக்கும்போது டைப் பண்ணி சேருங்க :)

   Delete
 7. மாங்காய் ரசமா?  அடடே.....கேள்விப்பட்டதே இல்லை!  இதோ பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இது செம்மாங்காய்னு சொல்லலாம் ஸ்ரீராம் காயுமில்ல பழமுமில்லை ..செங்காய் ரசம் 

   Delete
 8. வெந்தயம் ரசத்துக்குத் தாளிப்பார்களா?  இதுவரை நாங்கள் செய்ததில்லை.  கொக்கம் புளியும் சேர்த்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. வெங்காய ரசத்துக்கு வெந்தயம் வெங்காயம் சேர்ப்பாங்கன்னு மேனகா சத்யா ஸாக்ஷிகா பிளாக்கர் சொன்னாங்க .அப்பப்போ இப்படி சேர்ப்பேன் சுவை நல்லாவே இருக்கு 

   Delete
 9. மாம்பழம் அல்லது மாங்காய் ப்ளஸ் புளி...    ரொம்ப புளிப்பாகி விடாதோ...

  ReplyDelete
  Replies
  1. கோக்கம் புளி பதிவில் லிங்க் இருக்கு பாருங்க அதில் காய்ந்த வெரைட்டி உப்பு சேர்த்த ஈர வெரைட்டி இரண்டு இருக்கு காய்ந்தது புளிப்பு அதிகம் ஈர வகை புளிப்பு குறைவு அதனால் சேர்த்தேன் உடம்புக்கு மிகவும் நல்லது நம்ம பழப்புளியை விட கொக்கம் மற்றும் கொரக்கா சிறந்தவை மங்களூர் கேரளாக்காரர்கள் இதைத்தான் யூஸ் பண்றங்க 

   Delete
 10. நேற்றுத்தான் அங்கே மாம்பழ ரசம் உண்டான்னு கேட்டிருந்தேன்.

  புளியும் சேர்ப்பதால் மாங்காய் ரசம் ரொம்ப புளிப்பா போயிடலையா? இல்லை புளியைக் குறைத்துச் சேர்க்கணுமா?

  நீங்க மல்லி போடலைனு நினைக்கறேன். நன்றாக வந்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நெல்லை தமிழன் லேட் நைட் கேள்வி பார்த்ததுமே இங்கே போஸ்ட்டாக்கிட்டேன் :) நன்றீஸ் உங்களுக்கு 

   Delete
 11. கென்யா மாங்காய் அங்க கிடைச்சதா?

  ReplyDelete
  Replies
  1. இது எந்த ஊர் வெரைட்டின்னு தெரில நெல்லைத்தமிழன் அநேகமா கென்யா இல்லைன்னா ஜிம்பாபவே தான் இருக்கணும் .புளிப்பு இல்லை ஸ்வீட் சுவைத்தான் இருந்தது .நான் சேர்த்து கொக்கம் wet வகை அதில் உப்பு சேர்ப்பதால் புளிப்பு குறைவாத்தான் இருந்தது .அளவு பார்த்து சேர்த்து செய்யுங்க .இ.நம்மூரில் நாலு மிளகு நாற்பதுக்கு இங்கே சமம் காரமில்லாதது இங்கே அதனால் தான் கொஞ்சம் ரசப்பொடியையும் சேர்த்தேன் 

   Delete
  2. இங்கே செங்காயாக ஒரு மாங்காய் கிடைச்சு அதில் ஊறுகாய் போட்டேன். ஆனால் இரண்டே நாட்களில் ஊறுகாய் வீணாகிவிட்டது.

   Delete
 12. 1வது படத்தில ரசத்தை அப்படியே குடிக்கலாம் . கொக்கம் என்பது கொடுக்காபுளிதானே அஞ்சு.நல்ல புளிப்பு மாங்காய் கிடைத்தது கொஞ்நாளா. ஊறுகாய் போட்டது போக,புளிக்கு பதிலா மாங்காய் பாவித்தேன். ரசப்பொடி extra வா? விம் ப்ளீஸ். மாங்காய் கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா கொக்கம் வேற கொரக்கா வேற .அமேசான் லிங்க் அனுப்பட்டா .இது கோக்கம் நீரில் கரையும் பொது சிவப்பு கலர் வரும் .ரசப்பொடி கொஞ்சூண்டு தான் சேர்த்தேன்.எங்க ஊர் மிளகு காரமில்லாதபோலிருந்துச்சி :)காரம் அவரவர் விருப்பத்துக்கு சேர்த்து செய்யுங்க 

   Delete
 13. கொமண்ட் போஸ்ட் செய்தபின்தான் நீங்க தந்த லிங் பார்த்தேன். அவ்வ்வ்வ்.

  ReplyDelete
  Replies
  1. no worries :)
   அதில் பாருங்க இரண்டு வகையும் இருக்கு 

   Delete
 14. ஆஆஆஆஆ ரசம் ரசம்ம்ம்ம்ம்ம் ... வாசம் வரவே ஓடி வந்தேன்...

  ReplyDelete
  Replies
  1. மெதுவா மெதுவா :) என் பிளாக் நிலநடுக்கம்வந்தாப்ல ஆடுது 

   Delete
 15. நோஓஒ நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன் இது ரெடினேட் ரசம்:) ஏனெனில் ரசப்பொடி சேர்த்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்:).. ரசப்பொடி எப்படி செய்ததெனவும் சொல்லோணுமாக்கும்:)..

  ReplyDelete
  Replies
  1. ஹையோ அது பெருங்காயத்தூளும் பருப்பும் சேர்க்காததால் ரசப்பொடி கொஞ்சம் சேர்த்தேன் தப்பா கவரிமியாவ் 

   Delete
 16. மாங்காய் ரசம் இதுவரை செய்ததில்லை, நான் மாங்காய் வாங்கினால் உடனேயே சாப்பிட்டு முடிச்சிடுவேன் பின்பு எங்கு ரசம் செய்வது ஹா ஹா ஹா... பார்க்க சூப்பராத்தான் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர் :) இது சுவையா இருக்கும் ..கொஞ்சம் பிளாஸ்டர் வாய்க்கு போட்டு ரசம் செய்யுங்க நெக்ஸ்ட் டைம் :)

   Delete
  2. ஏதோ ஏகப்பட்ட ரசம் செய்து பார்த்த மாதிரி ஓவர் பில்டப்.. மிளகு ரசம், வேப்பம்பூ ரசம், கண்டதிப்பிலி ரசம் இதெல்லாம் கேள்விப்பட்டிருப்பாங்களா? சும்மா.. மாங்காய் ரசம்தான் செய்யாததுமாதிரி...ஹா ஹா

   Delete
  3. ஹாஹாஹா :) அகெய்ன் அண்ட் அகெய்ன் :) கவரிக்கு கலாய் :)சுடுதண்ணியை இட்லி மாவுக்கு கரைச்சி புளிக்க வைக்க ட்ரை பண்ணினவங்க தானே கவரீஈ :)

   Delete
  4. ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடிலப்பா...

   போன வாரம் வீட்டில் கண்டந்திப்பிலி ரசம்...இங்கு மழை அவ்வப்போது அதுவும் இரவிலும் நிறைய பெய்கிறது...ஸோ இதமான கண்டந்திப்பிலி ரசம்...இங்கு இன்னும் நாட்டு மருந்து க்டை எங்குனு பார்க்கலை. அருகில் இல்லை எலங்கா ன்யூ டவுன் தான் போகணும் போல...அதுவும் ரொம்ப தூரம் இல்லை. ஆனால் பொருட்களுக்கு முதலில் கன்னடத்தில் என்ன என்று தெரிந்து கொண்டு போகணும் ஹா ஹாஅ இதுவரை சென்னையிலிருந்து கொண்டு வந்த கண்டந்திர்ப்பிலி, திப்பிலி ஏல அரிசி வைச்சு ஒப்பேத்தியாச்சு இப்ப தீபாவளி வேறு வருது லேகியம் செய்யனும்...ஸோ...

   கீதா

   Delete
 17. ரசத்துக்கு வறுத்தரைப்பது... இப்போதான் கேள்விப்படுறேன்...

  ReplyDelete
  Replies
  1. கீதாக்கா பக்கம் பாருங்க விதவிதமா ரசம் இருக்கு :) இது ஒரு வகை பொரித்து அரைப்பது 

   Delete
  2. ரசம் வைச்சுச் சமைச்சிருந்தாத் தானே கவரிமாவுக்கு ரசத்துக்கு வறுத்து அரைப்பது பற்றித் தெரியும்! இஃகி,இஃகி,இஃகி!

   Delete
  3. ஹ்ஹஹ்ஹா நானும் சிரிச்சிக்கறேன் ஹையோ ஹாயையோ :) wok ல ஆப்பம் சுட்ட இட்லியை க்ளிங் ராப்பில் அவித்த  பெருந்தகையாச்சே எங்க கவரி ரி ரீ 

   Delete
  4. ஹா ஹா ஹா ஹா ஹையொ மீ டூ ஏஞ்சல் சிரிச்சு முடிலப்பா...

   கீதா

   Delete
 18. வறுத்ததை அரைக்கும்போது நன்றாக பசையா அரைச்சீங்களோ...

  ReplyDelete
  Replies
  1. ப்ரீத்தி சட்னி அட்டச்மண்ட் பொடியா அரைக்கும் மியாவ் 

   Delete
 19. ///பிறகு அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து அதில் ////

  ஹையோ ஆண்டவா என்னால முடியல்ல சாமீஈஈ:).. எங்கட குண்டுத்தாமோதரம் அங்கிள் ரேஞ்சுக்கு ரெசிப்பி எழுதுறா அதுவும் ஒரு ரசத்துக்கு கர்ர்ர்ர்ர்:)...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) ஒரு ஜீனியஸ் இப்படி தான் எழுதுவாங்க .உங்களுக்கு ஜெலஸ் ..நான் சமையலில் உங்களைவிட டாப்புக்கு போய்ட்டேன்னு 

   Delete
 20. ///இதே முறையில் ஆப்பிள் ரசம் செய்ய ஒரு ஐடியா இருக்கு பார்ப்போம் :) ///
  ஆஆஆஆ அதிரா இப்போ அப்பிளைக் காப்பாத்த ஓடுகிறேன்ன்ன்:)...

  நான் ஆடையில் குக்கிங் அப்பிள் வாங்கி கறிக்குள் போட்டு மாங்காய் போல் சாப்பிட்டேன்ன் அது ஓவர் குளிராம்... நெஞ்சடைப்பதுபோல வந்திட்டுது... அத்தோடு வாங்குவதில்லை...
  அது எப்பவும் கிடைக்குமே இங்கு சூப்பமார்கட்டுகளில்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) ஆப்பிளை சட்னி ஊறுகாய் செயலாம் எந்த கறிக்கு போட்டீங்க :) ஆனால் கவனமா இருக்கணும் சில உணவு சிலவற்றுடன் சேரும்போது இப்படி தொல்லை வரும் 

   Delete
 21. ///அடுத்து வேறொரு சமையல் பதிவில் உங்களை சந்திக்கின்றேன் :)///

  அல்லோஓ அல்லோஓ ஆரது ட்றம்ப் அங்கிளோ?:)... தோஓஒ இப்பவே பிளேன் எடுக்கிறேன்ன்ன்ன்:)..

  ReplyDelete
  Replies
  1. ஆங் எஸ் உடனே அவருக்கும் ரசம் செய்து ..இது அஞ்சுவின் ரெசிபின்னு சொல்லுங்க மறக்காம 

   Delete
 22. மாங்காய் ரசம் பார்க்கவே அழகு.
  ருசியும் அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
  படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா .ஆமாங்கா .சுவை நல்லாவே இருந்தது எனக்கும் வீட்டிலும் விரும்பி சாப்டாங்க .

   Delete
 23. ஆப்பிள் ரசம் செய்து இருக்கிறேன் நான். மாங்காய் ரசம் செய்தது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதிக்கா .ஆப்பிள் ரசம் உங்க பதிவில் இருக்கா ? சுவை எப்படி இருந்தது .எனக்கும் செய்ய ஆசை 

   Delete
  2. ஏஞ்சல் சுவை சூப்பரா இருக்கும் ஆப்பிள் ரசம் நான் பச்சை வைத்தும் செய்திருக்கிறேன்...மற்ற ஆப்பிள் சிவப்பு அதை வைத்தும் செய்திருக்கிறேன் பச்சை கிடைத்தால் செய்து எபியில் போடுகிறேன்...

   சிவப்பும் கொஞ்சம் பைனாப்பிள் ரசம் போலத்தான் இனிப்பும் கலந்து இருக்கும் பைனாப்பிள் ரசம் செய்வது போலத்தான் செய்கிறேன் ஏஞ்சல். கொஞ்சம் ஆப்பிள் துண்டங்கள் பொடியாக நறுக்கிப் போட்டு ஆனால் அதை இறுதியில் விளாவும் போது போட்டாலே போதும் (நான் இங்கெல்லாம் தோல் மெழுகு கலந்து வருவதால் தோல் எடுத்தோ அல்லது வென்நீரில் போட்டு மெழுகை எடுத்துவிட்டு) வெந்துவிடும். அப்புறம் கொஞ்சம் அரைத்தும் இறுதியில் கலக்கலாம்...நான் ஜூஸ் எடுப்பது பொல் எடுத்து எல்லாம் செய்வதில்லை அப்படியே போட்டுவிடுகிறேன். இதற்கு பருப்பு கொஞ்சமே கொஞ்சம் போதும். ஏனென்றால் ஆப்பிள் அரைத்துப் போடுவதால் அதுவும் விழுது போலத்தானே இருக்கும் ரசம் கெட்டியாகிடும் என்பதால்...

   மற்றபடி பைனாப்பிள் ரசம் செய்வது போலத்தான் செய்கிறேன் ஏஞ்சல்..

   முடிந்தால் திங்க வுக்கு செஞ்சு அனுப்புகிறேன்...

   கீதா

   Delete
 24. முதலில் கொக்கம் புளி என்ன என்று புரியவில்லை. பின்னர் படம் பார்த்தவுடன் தான் புரிந்த்து. இங்கு கேரளத்தில் இதை குடம் புளி என்று சொல்வார்கள். முக்கியமாக மீன் குழம்புக்கு அதுவும் நெய்மீன் (வஞ்சிரம்) குழம்புக்கு உபயோகிக்கப்படுவது.  இங்கு மாங்காய் சீசன் முடிந்துவிட்டது. அதனால் mango ரசம் எல்லாம் படத்தில் பார்ப்பது தான். Jayakumar

  ReplyDelete
  Replies
  1. Garcinia indica, a plant in the mangosteen family (Clusiaceae), commonly known as kokum, is a fruit-bearing tree that has culinary, pharmaceutical, and industrial uses.

   Delete
  2. Garcinia gummi-gutta is a tropical species of Garcinia native to Indonesia. Common names include Garcinia cambogia (a former scientific name), as well as brindleberry, Malabar tamarind, and kudam puli (pot tamarind).

   Delete
  3. வாங்க ஜேகே சார் .இது வேற குடம் புளி வேற .ரெண்டும் ஒரே குடும்பமா இருந்தாலும் அங்காளி பங்காளிங்க :))கொக்கம் உப்பில் ஊறப்போட்டது சும்மா சாப்பிடலாம் அந்த பாலாடை நீரில் போட்டு ஜூஸ் குடிக்கலாம் .குடம்புளி வெறும் குழம்புக்கு மட்டுமே .கொக்கம் புளி ,புனர் புளி என்கிறாங்க மங்களூரீஸ் .

   Delete
  4. Thanks for the explanation and correction.

   Delete
 25. தமிழ்நாட்டு நாட்டு மருந்துக்கடைகளில் கொக்கம்புளி, குடம்புளி இரண்டுமே கிடைக்கும். கொஞ்ச மாதங்கள் குடம்புளியிலேயே சாம்பார், ரசம் பண்ணி இந்துப்பும் போட்டுச் சமைத்தேன். ஆனால் சீக்கிரமாகவே நம்ம ரங்க்ஸுக்கு அலுத்துவிட்டது. அப்புறமாப் பழைய குருடி, கதவைத் திறடி கதை தான். மாங்காய் சாம்பார், மோர்க்குழம்பு பண்ணிச் சாப்பிட்டிருக்கேன். ரசம் பண்ணியதில்லை.

  ReplyDelete
  Replies
  1. அக்கா ..கொடம்புளி சாம்பாருக்கு நல்லா இருக்காதுக்கா .நானும் முயன்றேன் நல்லவேயில்ல .
   கொக்கம் புளியாச்சும் ரசத்துக்கு நலல இருக்கும் .பொதுவா  கொடம்புளியை அசைவத்துக்குத்தான்  பயன்படுத்துவாங்க .
   கொக்கம் ரசத்துக்கு நல்லா இருக்கும் ஏப்பம் பிரச்சினை கூட வராது 

   Delete
  2. மஹாராஷ்ட்ராவில் கிடைக்கும் கறுப்புப் பட்டாணி போன்ற ஒன்றுக்குக் கொக்கம் புளி தான் பயன்படுத்துவாங்க. அவங்க சமைக்கையில் நன்றாகவே வருது. நமக்கு வரதில்லை. அதனால் ரிஸ்கே எடுப்பதில்லை.

   Delete
  3. ஆமாம் ஏஞ்சல் கீதாக்கா, நானும் கோக்கம், குடம் புளியில் சாம்பார் செஞ்சுருக்கேன் ஆனால் குடம் புளியை விட கோக்கமாவது ஏற்றுக் கொள்ளப்பட்டது...ஆனால்கொ பு ஏற்றுக் கொள்ளப்படவில்லை... கொடம் புளி அசைவத்துக்குத்தான்...கோக்கம் ரசத்துக்கு நல்லாருக்கும்...

   ஆமாம் கீதாக்கா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், சென்னையில் பாம்பே ஸ்டோர்சில் கண்டிப்பா கிடைக்கிரது. உப்பிட்டது உப்பிடாதது என்று.

   இங்கு பங்களூரில் கோக்கம் ஜூஸ் விற்கிறாங்க. நான் வீட்டிலேயே செய்வதுண்டு. அதுவும் எடை குறைக்கும் என்றும் வேறு சொல்லபடுகிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   Delete
 26. சூப்பரா இருக்கு அஞ்சு ...

  மாங்காய் ரசம் இதுவரை செய்தது இல்லை....அடுத்த முறை செஞ்சு பார்க்கிறேன்..

  ReplyDelete