Monday, 3 August 2020

வீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை 

முளைக்கீரை ..

(இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன் )

                                                                            
கடையில் வாங்கிய கீரைகளின் அடித்தண்டை வெட்டி தொட்டியில் நட்டு விடவும் .கீரை வாங்கி சமையலுக்கு வெட்டும்போது நன்கு முற்றிய தண்டுகளை கணுக்களோடு வெட்டி தொட்டியில் நட்டால் சிலநாட்களில் இலை துளிர்த்து செடி வளரும் .இப்படி வளரும் கீரை இலை அவ்வளவு பெரிதாக வளராது ஆனால் பூக்கள் கொத்தாய் வளரும்.

                                                                                  


இப்போ விதைகள் தெரியும் முற்றி மஞ்சள் நிறம் ஆகும்போது ஒரு நியூஸ் பேப்பரில் பரப்பி காய வைக்க வேண்டும் .

                                                                              

                                                                                    
இதேபோல் மணத்தக்காளி செடியும் வீட்டில் தொட்டியில் வளர்க்கலாம் . மணத்தக்காளி தண்டுகளை நட்டு வைக்க அவை வளர்ந்து பூ காய் என  மண்ணில் விழுந்து மீண்டும்  செடிகளாக தொட்டியில் முளைக்கும்.
இவற்றை தனியே பிரித்து நடலேன்னா எல்லாம் வளர இடமிருக்காது.

                                                                                இது ஏப்ரல் மாதத்தில் இருந்து போன வாரம் வரை 4 முறை இலைகளை மட்டும்  வெட்டி கீரை கடைசல் செய்ய செய்ய எடுத்து தண்டுகளை வேருடன் மீண்டும் தொட்டில வளரவிட்ட செடி :)
கீரைச்செடிக்கு நான் வெங்காயத்தோல் பூண்டுதோல் லைம் தோல் ஆரஞ்சுத்தோல் எல்லாம் கொடுத்து வளர்த்தேன் :)
கூடவே க்ரீன்டீ மஞ்சள்  டீ எல்லா ஹெர்பல் டீயும் கொடுத்தேனே 


                                                                               
  தரையோ தொட்டியோ அல்லது கண்டேய்னரோ மணத்தக்காளி செடி வளர்ந்து காய்கள்  பழுத்த நிலைவரும்போது ஒன்றிரண்டு பழங்களை பறித்து ஒரு டிஸ்யூ காகிதத்தில் சற்று அழுத்தி காய வைத்து பத்திரப்படுத்தி விட்டால் தேவையான நேரம் விதைகளை பயன்படுத்தலாம் .ஒன்றிரண்டை செடியில் விட்டு வைத்தால் அவை தரை /தொட்டியில் விழுந்து மீண்டும்  மீண்டும் முளைக்கும் ..எங்களுக்கு வின்டரில் தூங்கி சரியா மார்ச் மாதம் முளைக்கும் .

                                                          *********************************
21 comments:

 1. பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது. தோட்டத்தைப் பராமரிப்பதும் பயிர் செய்வதும் எனக்கு மிக மிகப் பிடித்தமான ஒன்று. எதற்கும் வழியில்லாமல் அயல்நாட்டில் அடைபட்டுக் கிடக்கிறேன்.மணத்தக்காளி என் வீட்டுக்கு அழையா விருந்தாளி. எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க .இங்கே இது லண்டனில்  நிறைய ரோடெல்லாம் வளர்ந்து  இருக்கு ஆனா அவை பாய்சன் வெரைட்டின்னு இங்கே வெளிநாட்டவர் தொடமாட்டாங்க .நானும் அதை கண்டு ஒதுங்கிடுவேன் .இந்த செடிகள் கடையில் வாங்கிய கீரை தண்டு குச்சிகளை நட்டு வளர்ந்தவை .அதோடு எங்களுக்கு வெயில் காலம் மே முதல் செப்டம்பர் வரைதான் அதுக்குள்ள ஆசைப்பட்டதை வளர்த்து விடணும் .நான் சோளம் வேர்க்கடலை கொண்டை கடலை  கூட முயன்று வெற்றியும் கண்டிருக்கேன் .மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் 

   Delete
 2. கொத்துமல்லி, கீரை எல்லாம் நானும் முயற்சித்திருக்கிறேன். சரியாய் வந்ததில்லை.  நீங்கள் சொல்வது போல அதிலிருந்து விதை எல்லாம் எடுத்து முயற்சித்ததில்லை.  ஆவின் பால்காரர் ஒருவர் அவர் உபயோகித்த கேஸ் ஒன்றைத் தந்திருக்கிறார்.  அதில் மண் நிரப்பி செடிகள் போடவேண்டும் என்று பல மாதங்களாக நினைத்திருக்கிறேன்.  இன்னும் வேளை வரவில்லை!  அவ்வளவு சுறுசுறுப்பு நான்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் :) நேரம் வேளை எல்லாம் நாம்தான் உருவாக்கணும் .பொருள் கையில் இருக்கு இன்னும் என்ன தாமதம் உடனே மல்லியோ மணத்தக்காளியோ போடுங்க காய்ந்த வற்றலை உதிர்த்து விட்டா அதுவும் வளரும் .மல்லி சப்பாத்திக்கட்டையில் உருட்டி தட்டி போடுங்க வளரும் .மிக முக்கியம் எதுனாலும் ஆர்கானிக் விதைகளை யூஸ் பண்ணுங்க மற்றது முளைக்கும் சான்ஸ் குறைவு .ஒருமுறை நட்டா அதிலே விதை எடுத்து சேமிக்கலாம் .

   Delete
 3. தோட்டம், செடிகள், பூக்கள் என்று இருந்து அனுபவித்த காலமெல்லாம் போயே போய்விட்டது. அக்கம்பக்கம் பார்த்து ரசிப்பதோடு சரி. நாங்களும் எல்லாக் கீரையும் போட்டிருக்கோம். மணத்தக்காளி, சுண்டைக்காயெல்லாம் தானாகவே வளர்ந்து பலன் கொடுத்தன. பிரண்டை, வெற்றிலைக்கொடியில் இருந்து எல்லாமும் போட்டாச்சு. இப்போ எதுவும் இல்லை. நாலு சுவர்கள் தான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா .இங்கே வெளிநாட்டில் கிடைக்கற வெயிலை யூஸ் பண்ணனும் இல்லேனா அலோதான் நம்மூரில் எங்க வீட்டில் எல்லாம் இருந்தது .எனக்கும் அதெல்லாம் மிஸ்ஸிங் இங்கே ஆனாலும் விடாப்பிடியா கிழங்கு மற்றும் கீரை தொடர்ந்து நடறேன் 

   Delete
 4. பசுமையான தோட்டம் ...சூப்பரா இருக்கு அஞ்சு

  வெங்காயத்தோல் பூண்டுதோல் லைம் தோல் ஆரஞ்சுத்தோல் எல்லாம் கொடுத்து வளர்த்தேன் :)...ஆஹா
  கூடவே க்ரீன்டீ மஞ்சள் டீ எல்லா ஹெர்பல் டீயும் கொடுத்தேனே ...ஓஹோ ...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ நேச்சுரலா ப்ரொடெக்ட் செய்றேன்பா பூச்சிக்கொல்லி போடறதுக்கு பதில் இதெல்லாம் போதும் ஹஆஹாஆ 

   Delete
 5. ரொம்ப சூப்பரா இருக்கு ஏஞ்சல்.

  ஆமாம் ஏஞ்சல் நானும் இப்படித்தான் தண்டை நட்டு வைத்து வளர்ப்பது. ஆனால் நீங்க சொன்னப்ல இலை பெரிசா வராது அது பொல புதினாவும்.

  இங்கு வீட்டைச் சுற்றி மண் இல்லை. ஸோ பக்கத்து வீட்டுல நான் பாகற்காய் வாங்கறப்ப பழுத்து முத்தின விதை புடலங்காய் கீரை என்று எல்லாம் அவங்க வீட்டு பின்னால போட்டு இப்ப பாகற்காய் காச்சு அதை அவங்க சமைக்க மாட்டாங்கன்னு நான் பிட்லா செஞ்சு அவங்களுக்கும் கொடுத்தேன்.

  இப்ப கீரை கொடிப் பசலை நல்லா வந்திருக்கு. பறித்து சமைககணும். அது போல புடலை வந்திருக்கிட்டுருக்கு இப்ப. அவங்க கிட்ட சொல்லிட்டே இருக்கேன் மிதிச்சாராதீங்கன்னு. ரொம்ப பாவமானவங்க. அந்த அம்மா வீட்டுல வேலை செஞ்சு பிழைப்பு. இப்ப லாக் டவுன் நோ வேலை. 6 பசங்க மாமியார் நு பெரிய குடும்பம் ஒரே ஒரு ரூம் தான்.

  படமெ டுத்து வைச்சுருக்கேன் பாகற்காய், கொடிப் பசலை எல்லாம்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நல்ல முயற்சி கீதா .சீக்கிரம் படங்களை போடுங்க எனக்கும் புடலை வளர்க்க ஆசை ஆனா வெயில் வரத்தும் போறதுமா இருக்கே 

   Delete
 6. ஏஞ்சல் எனக்கும் தோட்டம் ரொம்பப் பிடிக்கும்...

  சென்னையிலாவது வீட்டு பால்கனியில் தொட்டி வைச்சு செஞ்சேன் இங்கு அதுவும் இல்லை. ஏன்னா அடுத்து எங்கேயோ நம்ம மூட்டைய தூக்கணும்னு இருக்கறதுனால ..அதான் பக்கத்துவீட்டு மண்ணுல போடுறேன்...பார்ப்போம்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா எங்க தோட்டத்திலும் ஸ்லக்ஸ் நத்தை வருவதால் வெறும் பூந்தோட்டமாக்கிருக்கேன் இது கிச்சனை ஒட்டி வெளியே கான்க்ரீட் இடத்தில தொட்டில் வச்சது .

   Delete
 7. தண்டுக்கீரை, மணத்தக்காளிக் கீரை - பார்க்க அழகாக இருக்கின்றன. படங்களு அழகு.

  ஆனா நிறைய இடத்தில் இதனைப் பயிரிட்டால்தான் வீட்டுக்குத் தேவையான அளவு வரும். அதுவும் தவிர, ஒரு மணத்தக்காளி கீரைக்கட்டு அல்லது அரைக்கீரைக் கட்டு இங்கு 15 ரூபாய்தான். அதுக்கு எதுக்கு இவ்வளவு மெனெக்கிடவேண்டும் என்று தோன்றிவிடும்.

  ReplyDelete
  Replies
  1. நான் 4/5 தொட்டிகளில் வச்சேன் .நீங்க சொல்றது உண்மைதான் நம்மூரில் கறிவேப்பிலை மல்லி மட்டும் போதுமானது கடைகள் கிட்டே இருக்கும் பட்சத்தில் .ஆனால் இப்படி வளர்க்கும்போது மனசுக்கு ஒரு சந்தோசம் அதை நீங்களும் அனுபவிச்சு பாருங்க .மகள்கிட்ட கேளுங்க அவங்களுக்கு தெரியும் :) சொல்வாங்க .விரைவில் ஸ்ப்ரிங் அனியன் லீக்ஸ் வந்ததும் அதில் சமையல் குறிப்பு போடுங்க 

   Delete
 8. நீங்களும் விவசாயி ஏஞ்சலின் என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம்.

  (சூப்பர்மார்க்கெட்ல உள்ள காய்களையே படமெடுத்துப் போட்டு விவசாயி பட்டம் நாட்டுல வச்சிக்கும்போது உண்மையாகவே விளைச்சல் செய்யும் நீங்க அந்தப் பட்டம் வச்சுக்கலாமே என்பதற்காகச் சொன்னேன்)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா ஹய்யோ :) விவசாயின்னாலே அது ஸ்கொட்டிஷ்க்காரம்மா தான் நான் வேணும்னா தொட்டி விவசாயி .வீட்டுத்தோட்டவிவசாயின்னு வச்சிக்கறேன் :) அவங்க வருவாங்க விரைவில் அறுவடையோடு :)

   Delete
 9. தோட்டப்பதிவு அருமை.
  ஏன் எனக்கு காட்ட மாட்டேன் எங்கிறது இந்த பக்கம் என்று தெரியவில்லை.

  மிகவும் அருமையான தோட்டம். நம் வீட்டில் வளர்த்த கீரை என்றால் ருசி அருமையாக இருக்கும்.

  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது ஏஞ்சல்.

  ReplyDelete
 10. தோட்டப்பதிவு அருமை.
  ஏன் எனக்கு காட்ட மாட்டேன் எங்கிறது இந்த பக்கம் என்று தெரியவில்லை.

  மிகவும் அருமையான தோட்டம். நம் வீட்டில் வளர்த்த கீரை என்றால் ருசி அருமையாக இருக்கும்.

  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது ஏஞ்சல்.

  ReplyDelete
 11. அழகான தோட்டம் ! கெமிக்கல் இல்லாமல் உடலுக்கு சிறப்பானது

  ReplyDelete